காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் ஐந்து நன்மைகள்

6764

உடலுறவு என்பது மனித இனத்தின் இயற்கையான ஒரு செயல்பாடு. ஆணோ, பெண்ணோ தனியாக அல்லது எதிர் பாலினத்தவருடன் இருக்கும்போது அல்லது பிற எந்த நேரத்திலும் அவர்களுக்கு பாலியல் கிளர்ச்சி உண்டாகலாம். சிலசமயம், பாலியல் கிளர்ச்சி தொடங்கும் நேரம் சரியில்லாததால், உடலுறவு அந்த அளவு விரும்பிய அனுபவமாக இல்லாமல் போகக்கூடும். இருப்பினும், காலை நேரம் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ஏனெனில் காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது சௌகரியமானது என்பதுடன் பல்வேறு உடல்நல நன்மைகளும் உள்ளன.
காலையில் உடலுறவில் ஈடுபடுவது ஏன் நல்லது, அதனால் எப்படி நன்மைகள் கிடைக்கின்றன எனப் பார்ப்போம்

1) சௌகரியமானது, அத்துடன் உங்களை ஆசுவாசமாக வைத்துக்கொள்கிறது:
நீண்ட நேரம் வேலை செய்வது, பயணம் செய்வது, வீட்டு வேலைகள் போன்ற பல காரணங்களால் நாம் அதிகம் களைப்படைந்து மன அழுத்தத்துடன் இருப்போம். இதற்கெல்லாம் பிறகு வீட்டுக்கு வந்ததும் படுத்து உறங்கினால் போதும் என்றுதான் தோன்றும்.ஆனால் இரவெல்லாம் நன்றாகத் தூங்கி எழுந்தபிறகு காலை வேளையில் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் தெம்பாகவும் இருப்பீர்கள். உங்கள் ஆசைகளை ஆற்றலுடன் வெளிப்படுத்த ஏற்ற சூழ்நிலையாகவும் காலை வேளை இருக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் புணர்ச்சிப் பரவசநிலையே உண்மையில் மனநிலையை ஊக்குவித்து மேம்படுத்துகிறது, இதன் காரணமாக நாள் முழுதும் நீங்கள் ஆசுவாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

2) உங்கள் துணைவருடன் நெருக்கத்தை மேம்படுத்துகிறது:
உங்கள் துணைவருடன் எப்போதும் நெருக்கத்தில் இருப்பது என்பதில் ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காலை நேரத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருப்பதே புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டும்.உடலுறவின்போது வெளியிடப்படும் ஆக்சிடோசின் ஹார்மோன் உங்களுக்கு நல்ல உணர்வையும் நேசிக்கப்படும் உணர்வையும் அளிக்கிறது, உடலுறவுக்குப் பிறகு சுரக்கும் என்டோர்பின் ஹார்மோன் உங்களை நாள் முழுதும் புத்துணர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.புத்துணர்வான உடலுடனும் ஆசுவாசமாக காலையில் நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது உங்கள் உடலுறவு மறக்க முடியாத இன்ப நினைவுகளை வழங்கிச்செல்லும். இந்த இன்ப நினைவுகளும், காலையில் கிடைக்கும் சிறந்த உணர்வும் உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கும்.

3) விறைப்புக் கோளாறு (ED) உள்ள ஆண்களுக்கு இது நல்ல பலன் தரும்:
விறைப்பு குறைவாக இருந்தால், விறைப்பே ஏற்படாமல் இருந்தால் அல்லது உடலுறவின் போது விறைப்புத் தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால் உங்களுக்கு விறைப்புக் கோளாறு இருக்கலாம். டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதும் விறைப்புக் கோளாறுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் காலை நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது இதற்கு ஓர் இயற்கைத் தீர்வாக அமையலாம். எனவே, விறைப்புக் கோளாறுள்ள ஆண்கள் காலை நேரத்தில் உடலுறவில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. காலையில் உடலுறவில் ஈடுபடுவது விறைப்புக் கோளாறு உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது என்பது கூடுதல் நன்மை.

4) நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது:
கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோன் (நோய் எதிர்ப்புத் திறனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஹார்மோன்) காலை வேளைகளில் அதிகபட்சமாக இருக்கும், மாலை நேரத்தில் குறையும். தினசரி நாம் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தால் கார்டிசோல் அளவு நாள் முழுதும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.இப்படியே தொடரும்போது, காலப்போக்கில் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மாறாக, காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது நாள் முழுதும் தெம்புடன் இருக்க உதவுகிறது, கார்டிசோல் அளவை சரியானபடி பராமரிக்கவும் உதவுகிறது. இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும்.

5) உடல்நலம் சம்பந்தப்பட்ட அபாயங்களைக் குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது:
உடலுறவில் ஈடுபட, நீங்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். கட்டுக்கோப்பாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது உடலுழைப்பு இருக்க வேண்டும். உடலுறவு என்பதே ஒருவித ஏரோபிக் பயிற்சி தான்.
காலை உடலுறவு என்பது இருவரும் புத்துணர்ச்சியுடனும் ஆசுவாசமாகவும் இருக்கும்போது நடக்கிறது. நாள் முழுதும் தொடரும் அதன் இனிய நினைவுகளும், நல்ல அனுபவத்தைக் கொடுப்பதால் இதே பழக்கமாக வாய்ப்புள்ளது. காலையில் உடலுறவு கொள்வதைப் பழக்கமாக வைத்திருந்தாள், உடல்நலம் மேம்படும் என்றும், நோயுறும் வாய்ப்பு குறையும் என்று பாலியல் நிபுணர் திரு. யுவோன் கே. ஃபுல்ப்ரைட், PhD கருதுகிறார்.
வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையேனும் உடலுறவில் ஈடுபடுவது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதாகத் தெரிகிறது என்று பெல்ஃபாஸ்ட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Previous articleநடிகை சிம்ரனின் காம தாகம்
Next articleகாம சுகத்துக்கு பொண்ணுங்க கோடு போடுவாங்க…! நீங்க ரோடு போடனும்..!