உடலுறவின்போது இதெல்லாம் செய்வதுண்டா?… இல்லன்னா இனியாவது ஞாபகம் வெச்சிக்கோங்க!

7224

tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

ஆரோக்கியமான உடலுறவு தான் உறவுகளை சிறந்ததாக மாற்றும். உடலுறவு என்பது நமக்கு ஒருவித கொண்டாட்ட மனநிலையைத் தரக்கூடியது. அதை நாம் எவ்வாறு பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிறோம் என்பது ஒவ்வொருவரையும் பொருத்து மாறுபடும்.

சிலர் சந்தோஷமாக இருக்கும்போது தான் உடலுறவில் ஈடுபட வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் மன அழுத்தத்துடன் இருக்கும்பொழுது உடலுறவில் ஈடுபட்டால் மன அழுத்தம் வெகுவாகக் குறைந்துவிடும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உடலுறுவில் உச்சத்தை எட்டுவதற்கு நீங்கள் கஷ்டமான காம சூத்திர பொசிசன்களை எல்லாம் முயற்சி செய்ய வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை. கீழ்வரும் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு, உடலுறவின் போது கடைபிடித்தாலே போதும், நீங்கள் அந்த விஷயத்தில் மிகப்பெரிய வெற்றியை கைக்கொள்ள முடியும்.

உடலுறவைப் பொருத்தவரையில் ஈகோ என்பதே இருக்கக் கூடாது. அதற்காக உங்கள் துணையிடம் கெஞ்சவும் கூட தயங்கக் கூடாது. ஒருவேளை உங்கள் துணைக்கு நீங்கள் அழைக்கும் நேரத்தில் உடலுறவில் விருப்பம் இல்லாமல் இருந்தால் கூட, நீங்கள் அவர்களிடம் அதிக பணிவுடன் கெஞ்சிக் கேட்டு தாஜா பண்ணலாம்.

உங்கள் துணையிடம் நட்புடன் இருந்தால் எந்த விஷயமும் எளிதாகக் கைக்கூடும்.

பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள். அதுதான் இருவருக்குமே நல்லது. உங்கள் துணை ஞாபகப்படுத்தும்படி இல்லாமல், அதற்கு முன்னதாக நீங்களாகவே ஆணுறையோ கருத்தடை மாத்திரைகளோ பயன்படுத்தினால் உங்கள் துணைக்கு உங்கள் மேல் இன்னும் கொஞ்சம் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

பெண்கள் பொதுவாக, அவர்கள் முன்பாகவே ஆண் சுய இன்பத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை என்று நினைக்கிறோம். ஒருவேளை உங்கள் துணை உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தால், அவர்கள் முன்பாகவே நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடலாம்.

அதோடு, அவர்களுக்கும் நீங்கள் உங்கள் கைகளைப் பயன்படுத்தி யஇன்பத்தை அனுபவிக்கச் செய்யலாம். அதில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்தமுறை அவர்களாகவே வேண்டும், வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.

ஒரு மாதத்துக்கோ அல்லது ஒரு வாரத்துக்கோ முன்கூட்டியே பிளான் செய்து கொள்வது நல்லது. அந்த வாரத்தில் உங்களுக்கு என்னென்ன வேலை இருக்கிறது. எப்போது உங்களுக்கு ஓய்வு என்பதை திட்டமிட்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அது ஆண், பெண் இருவருக்குமே அந்த நாளும் நேரமும் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரிக்கும்.

உடலுறவுக்கு முன் குறைந்த அளவு உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த கலோரியுள்ள உணவுகள் உறவின் போது உங்களைச் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளும். உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தரும்.

மேற்கண்ட சிறுசிறு உத்திகளை வழக்கமாகக் கையாண்டாலே போதும். கட்டில் விஷயங்களில் நீங்கள் ஜமாய்த்துவிடலாம்.

Previous articleகட்டில் அறையில் மனைவியுடன் எப்படி இருக்க வேண்ண்டும் ஒரு கணவன்!
Next articleதிருமணம் ஆன பிறகும் இப்படிச் சுய இன்பம் செய்யலாமா?