antharagam tamil sex – tamil sex antharankam – tamil sex story – tamil sex kathaikal – tamil sex study
ஒரு ஆய்வின் படி தெரிய வருவது என்னவென்றால் சிசேரியனோ அல்லது சுகப்பிரசவமோ, குழந்தை பிறப்புக்கு பின்பு செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் ஒருவித வலியை ஏற்படுத்தும் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் சிசேரியனால் குழந்தை பெற்றுக்கொண்ட அம்மாக்களுக்கு வலி என்பது இரண்டு மடங்கு அதிகம் இருக்குமாம். சிசேரியனுக்கு பிறகு ஒரு பெண் உடலுறவு கொள்ளும்போது எதிர்பாரா அளவுக்கு அந்த வலி இருக்குமெனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
சிசேரியனுக்கு பிறகு எப்போது செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்?
நீங்கள் சிசேரியன் செய்துக்கொண்டிருந்தால் குழந்தையை பெற்றெடுத்த முதல் 6 வாரம் வரையிலும் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்க்க பரிந்துரை செய்கின்றனர். இது சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் என எந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டாலும் குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க பரிந்துரை செய்யப்படுகிறது.
என்ன காரணம்?
குழந்தையை நீங்கள் பெற்றுக்கொள்ளும் போது கருப்பை என்பது விரிவடைகிறது. ஆனால், இந்த கருப்பை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் 6 வார காலங்கள் உங்களுக்கு ஆகிறது. அத்துடன் பிறப்புறுப்பிலிருந்து வழியும் இரத்தமும் முற்றிலும் நிற்பதற்கு இந்த 6 வார காலங்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது. இந்த ஆறு வார காலத்தில் சிசேரியனால் போடப்பட்ட தையலும் முற்றிலும் குணமடைய உதவுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது சில நேரங்களில் போடப்பட்ட தையலில் கோளாறு ஏற்படகூட வாய்ப்பு இருக்கிறது. கருப்பை இயல்பு நிலையை எட்டும் முன்னே நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனையை அதன்பிறகு சந்திக்கவும் நேரிடலாம்.
சிசேரியனுக்கு பிறகு செக்ஸ்: என்ன ஆகும்?
1. எஸ்ட்ரோஜன் அளவு குறைபாடு:
இந்த எஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன்கள் பிறப்புறுப்பின் திசுக்களை மேம்படுத்த உதவுகிறது. இதனால் உராய்வு தன்மையுடன் கூடிய பிசுபிசுப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் குழந்தை பெற்ற பிறகு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது இந்த எஸ்ட்ரோஜன் அளவு என்பது குறைய தொடங்குகிறது. இதனால் தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு தேவையான எஸ்ட்ரோஜன் அளவு என்பது குறைந்து போக, தாய்ப்பால் பற்றாக்குறையும் ஒரு தாய்க்கு ஏற்படுகிறது.
2. சிசேரியன் கீறலால் வலி ஏற்படும்:
இன்றைய நாளில் பெரிதும் செய்யப்படும் ஒரு சிசேரியன் முறை தான் இந்த ‘பிகினி’ அல்லது படுக்கை வடிவத்தில் கீறலிடும் சிசேரியனாகும். அதாவது அடிவயிற்றில் அந்தரங்க முடிக்கு சற்று மேலே கத்தியால் கிழிப்பார்கள். நீங்கள் சிசேரியனுக்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது அந்த கீறிய இடத்தின் காயம் ஆறாமல் இருக்க, இதனால் பெண்ணுக்கு வலியை ஏற்படுத்துகிறது.
3. இடுப்பு பகுதி செயலிழப்பு:
கர்ப்பத்தில் உங்கள் இடுப்பு என்பது மிகப்பெரிய பணியில் ஈடுபட, தசைகள் மற்றும் திசுக்கள் இடுப்பின் முன் மற்றும் பின்புறங்களில் இணைந்தும் காணப்படுகிறது. இதனால் சிசேரியன் செய்த பெண்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது தேவையற்ற வலியை சந்திப்பர். குறிப்பாக பிறப்புறுப்பில் வலி அதிகமிருக்க, அந்த வலியானது கருப்பை நோக்கி செல்கிறது. இதனால் பெண்கள் ஒருவித மன அழுத்தத்துடன் எந்நேரமும் இருக்கின்றனர்.
சிசேரியனுக்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் ஜோடிகள், குறைந்தது 6 வாரமாவது பொறுமையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஒரு பெண் பிரசவ காலத்தில் அனுபவிக்கும் வேதனையை ஆண் புரிந்துக்கொண்டாலே போதுமானது. அப்படியே உங்கள் மனைவியுடன் நெருக்கமாக இருக்க விரும்பினால், முத்தம் தந்து மகிழ்விக்கலாம். நீங்கள் எல்லை தாண்டுவதை உணர்ந்தால் தயவுசெய்து பொறுத்திருந்து உடலுறவு கொள்வது நாளை உங்கள் மனைவிக்கு ஏற்படப்போகும் பிரச்சனையை தவிர்த்து நலம் புரியும்.