முலைக்காம்புக் கசிவு: காரணங்களும் கட்டுப்படுத்தலும்

632

tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

முலைக்காம்புக் கசிவு என்றால் என்ன? (What is nipple discharge?)

மார்பக முலைக்காம்பின் வழியாக திரவநிலையில் ஏதேனும் கசிவு ஏற்படுவது முலைக்காம்புக் கசிவு எனப்படுகிறது. முலைக்காம்புக் கசிவானது முலைக்காம்பை அழுத்துவதனாலோ அல்லது தன்னிச்சையாகவோ ஒன்று அல்லது இரண்டு முலைக்காம்புகளிலும் ஏற்படலாம். முலைக்காம்பில் இருந்து கசிவு ஏற்படுவது மார்பகம் தொடர்பான பொதுவானதொரு அறிகுறியாகும்.

காரணங்கள் (Causes)

கர்ப்ப காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் முலைக்காம்புக் கசிவு ஏற்படுவது பொதுவானதாகும். தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இரண்டு முலைக்காம்புகளில் இருந்தும் பால்க்கசிவு ஏற்படலாம். சில பெண்களுக்கு பால் உற்பத்தி தங்களது இரண்டாவது மூன்றுமாத கர்ப்ப காலத்தில் துவங்கி தாய்ப்பாலை நிறுத்திய பிறகு இரண்டு ஆண்டுகள் வரை தொடரலாம்.

கர்ப்ப காலம் அல்லாத முலைக்காம்புக் கசிவு பின்வரும் காரணங்களை உள்ளடக்கியதாகும்:

நாள நுண்காம்புக் கட்டி – மார்பக நாளங்களில் வளர்ச்சியடையும் இது பொதுவாக ஆபத்தானது அல்ல. பால் சுரப்பியில் இருந்து முலைக்காம்புக்கு பாலைக் கொண்டு செல்லும் குழாயாக மார்பக நாளங்கள் இருக்கின்றன. பொதுவாக இதில் ஏற்படும் கசிவு இரத்தக்கறை படிந்ததாக இருக்கும்.
நாள நீள்வு – மார்பகத்தில் ஆபத்தில்லாத மாற்றம் ஏற்பட்டு மார்பகத்தில் இருந்து நிறமாற்றம் அடைந்த அல்லது கட்டித்தன்மை உடைய கசிவு ஏற்படும்.
மார்பக அல்லது முலைக்காம்புக் கட்டி – இது மார்பகத்தைச் சுற்றியோ அல்லது மார்பகத் திசுக்களைச் சுற்றியோ வலி ஏற்படுத்தும் சீழ் பிடித்த நிலை ஆகும். இதனால் பொதுவாக தொற்று ஏற்படும்.

ஆபத்துக் காரணிகள் (Risk Factors)
மார்பக முலைக்காம்புக் கசிவு ஏற்படுவதற்கு காரணமாகும் சில பொதுவான ஆபத்து காரணிகள்:

வாய்வழி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால்.
பருவமடையும் போதும் மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்.
முலைக்காம்புகளை கிளர்ச்சியூட்டுவதால்.
சில மருந்துகள் உட்கொள்வதாலும் புரோலேக்ட்டின் (பால் சுரப்புக்கு பொறுப்பேற்கும் ஹார்மோன்) அதிகரிப்பதாலும்.
தைராய்டு சுரப்பி செயல்பாடு குறைந்திருந்தால்
மார்பக பாகெட்டின் நோய் காரணமாக.
பால்கட்டி எனப்படும் கட்டியான பால் மார்பக நாளங்களை அடைந்துவிடுவதால்.
மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப வடிவமான சிட்டு கார்சினோமா ஏற்படுவதால்.
முலைக்காம்புக் கசிவும் புற்று நோயும் (Nipple discharge and cancer)

முலைக்காம்புக் கசிவில் பெரும்பாலானவை மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் இல்லை. எனினும், பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் அது புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்:

ஒருவருக்கு மார்பகத்தில் கட்டியுடன் மார்பகத் தோலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுதல்.
ஒரு முலைக்காம்பில் இருந்து மட்டும் இரத்தம் கசிதல்.
தன்னிச்சையாகத் தொடர்ந்து கசிவு இருத்தல்.
50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்.
அறிகுறிகள் (Symptoms)
ஒருவருக்கு முலைக்காம்புக் கசிவு இரண்டு முலைக்காம்பிலும் குறிப்பாக முலைக்காம்பை அழுத்தும் போது வெளிப்பட்டால் அது பொதுவாக வழக்கமான ஒன்றாகும்.

ஒரு முலைக்காம்பில் இருந்து தன்னிச்சையாக இரத்தம் கசிவது பொதுவாக அசாதாரணமான முலைக்காம்புக் கசிவு ஆகும். கசிவு வெளியேற்ற நிறத்தைப் பொறுத்து அது சாதாரணமானதா அல்லது இல்லையா எனக் கூற முடியாது. முலைக்காம்புக் கசிவு வெளியேற்ற நிறம் தெளிவான பால், மஞ்சள், பச்சை, இரத்தம் தோய்ந்த அழுக்கு நிறம் முதலிய மாறுபட்ட நிறத்தில் இருக்கலாம். நீங்கள் முலைக்காம்பை அழுத்தி கசிவை வெளியேற்ற முயற்சிப்பது மோசமான அறிகுறிகளை ஏற்படுத்திவிடும்.

நோய் கண்டறிதல் (Diagnosis)
உங்கள் மருத்துவர் உங்களிடம் அறிகுறிகள் தொடர்பான கேள்வியெழுப்பியும் உங்களது முழுமையான முந்தைய மருத்துவ வரலாறைக் கேட்டறிந்தும், பின்னர் உங்களை ஆய்வு செய்யலாம். உங்கள் மருத்துவர் பின்வரும் சோதனைகள் செய்ய பரிந்துரைக்கலாம்:

புரோலேக்ட்டின் இரத்தப் பரிசோதனை
தைராய்டு இரத்தப் பரிசோதனைகள்
மற்ற ஹார்மோன் அளவை சரிபார்ப்பதற்கான இரத்தப் பரிசோதனைகள்
மேமோகிராஃபி
மார்பக அல்ட்ராசவுண்ட்
பிட்யூட்டரி கட்டி கண்டறிய எம்ஆர்ஐ அல்லது சி டி ஸ்கேன்
பாதிக்கப்பட்ட பால்க் குழாய்களில் மாற்று நிற சாயத்தைச் செலுத்தி எக்ஸ்-ரே எடுக்கப்படும் டக்டோகிராபி அல்லது டக்டோகிராம் சோதனை
சந்தேகிக்கும் படியான சில குறிப்பிட்ட நிலைகளில் தோலில் செய்யப்படும் திசு ஆய்வு
வெளியேறும் கசிவை ஆய்வு செய்தல்
சிகிச்சை (Treatment)

முலைக்காம்புக் கசிவு சாதாரணமானதாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சை ஏதும் தேவையில்லை.

முலைக்காம்புக் கசிவுக்கான சிகிச்சை அதன் காரணத்தை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. அவை:

சில மருந்துகள் உட்கொள்வதால் உங்களுக்கு இது ஏற்படுகிறது எனில் அதை மாற்றப் பரிந்துரைக்கலாம்
தற்போதுள்ள உங்கள் தோல் நிறம் சில மேற்பூச்சு கிரீம்களால் மாறினால்
ஒருவேளை சீழ்பிடித்ததன் காரணமாக இது ஏற்பட்டிருந்தால், அவை வடிவதற்கான சிகிச்சையும் நுண்ணுயிர் தொற்று ஏற்படாதிருக்க சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும்
தைராய்டு சுரப்பிக் குறைபாடு இருந்தால் தைராக்சின் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படும்
பிட்யூட்டரி புற்றுநோயின் காரணமாக ஏற்படும் மிதமிஞ்சிய புரோலேக்டினைக் கட்டுப்படுத்துவதற்கு டோபமைன் இயக்கிகள் பரிந்துரைக்கப்படும்
உடலில் ஏற்படும் மற்ற பாதிப்புக்கான சிகிச்சையில் உட்கொள்ளும் மருந்துகளாலும் முலைக்காம்புக் கசிவு ஏற்படலாம்
தடுத்தல் (Prevention)

ஆரம்ப நிலையில் தொடர்ந்து மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுப்பது ஆரம்ப ஆய்வுக்கு உதவி செய்வதுடன் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக்கும்.

சிக்கல்கள் (Complications)

முலைக்காம்புக் கசிவானது பிட்யூட்டரி கட்டி அல்லது மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். பாகெட்டின் நோயின் காரணமான முலைக்காம்புத் தோலில் மாற்றங்கள் ஏற்படலாம்.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

ஒருவேளை உங்களது சோதனை முடிவு சாதாரணமானதாக இருந்தால் அடுத்த ஒரு வருடத்திற்குள் நீங்கள் உடற்பரிசோதனையும் மேமோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை (Red Flags)

உங்களது முலைக்காம்பில் இரத்தத்துடன் கூடிய அசாதாரண கசிவு ஏற்பட்டாலோ, உங்களது மார்பகத்தில் கட்டி இருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.

Previous articleகட்டிலில் போர்களத்தில் பெண்களை வெல்லவேண்டுமா?
Next articleகாம மங்கையின் ‘அந்த’ குறைபாடுகளுக்கான காரணங்களும் – தீர்வும்