இந்த சுய இன்ப மாத கொண்டாட்டத்தின் ஒரு பங்காக… பெண்கள் சிலரிடம் அவர்கள் சுய இன்பம் காண்பதற்கான காரணம் என்ன என்று இணையத்தளம் ஒன்று பேட்டி கண்டது. அதில், வெளிநாட்டு பெண்கள் தாங்கள் சுய இன்பம் காண்பதற்கான பல்வேறு காரணங்கள் கூறியுள்ளனர்.
சுய இன்பம் காண்பது ஆரோக்கியம் என்று பல ஆய்வறிக்கைகளில் வெளியாகி இருந்தாலுமே கூட. எத்தனை முறை சுய இன்பம் காண்கிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மெட்ரோ என்ற ஐரோப்பிய இணையத்தில் நல்ல உறக்கம் கிடைப்பதும், மன அழுத்தம் குறைப்பதும் சுய இன்பம் காண்பதற்கான காரணமாக பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனர்.
மன அழுத்தம்!
“நான் சோர்வாக இருக்கும் போது அல்லது மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள நினைக்கும் போது சுய இன்பம் காண்கிறேன். சுய இன்பம் காண்பதால் நான் மன ரீதியாக மேம்பட்டு உணர்கிறேன். நான் எப்போதும் தொடர்ந்து சுய இன்பத்தில் ஈடுபடுவதில்லை. அதற்கான சூழல் ஏற்பட வேண்டும். என்னை பொறுத்த வரை மன சோர்வாக உணரும் போது மட்டுமே சுய இன்பம் காண்பேன்.”
யாரையும் எதிர்பார்க்கவில்லை…
“நான் யாரையும் எதிர்பார்க்க விரும்பவில்லை. செக்சுவலான விஷயங்கள் அனைவருக்கும் தேவையான ஒன்று. நமக்கு தேவைப்படும் போது மற்றவரை எதிர்பார்த்து காத்திருப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதற்காகவே சுய இன்பம் காண்கிறேன். சுய இன்பம் காண்பதன் மூலம் நான் நல்ல உறக்கம் பெறுகிறேன். இதற்காகவே சுய இன்பம் காண்கிறேன்.”
புத்துணர்ச்சி! “என் மன நிலையை மீட்டெடுக்க… சோர்வை போக்கிக்கொள்ள நான் சுய இன்பம் காண்கிறேன். வாரத்தில் இரண்டு முறையாவது நான் சுய இன்பத்தில் ஈடுபடுகிறேன். சுய இன்பம் காணுதல் என்னை புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது. மற்றப்படி நான் சுய இன்பம் காண்பதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.”
கேளிக்கை! “சுய இன்பம் காண்பதற்கு காரணம் எல்லாம் வேண்டுமா? நான் கேளிக்கைக்காக தான் சுய இன்பத்தில் ஈடுபடுகிறேன். மேலும், சுய இன்பம் காணுதல் நான் இரவு சீக்கிரம் உறங்க உதவுகிறது. நல்ல உறக்கம் பெற சுய இன்பம் காணுதல் உதவும் என்பது ஆரம்பத்தில் நான் உணரவில்லை.”
தீர்வு! “நான் ரெகுலராக சுய இன்பம் கண்டு வருகிறேன். தினமும் காலை சுய இன்பம் காண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். இது என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனக்குள் செக்ஸுவல் எண்ணங்கள் அதிகமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அதை தீர்த்துக் கொள்ளவே சுய இன்பம் காண்கிறேன். மேலும், மன அழுத்தமாக உணரும் போதும், எனது மூளை எங்காவது ஸ்டக்காகி நின்றுவிட்டாலும் சுய இன்பம் காண்பது மூலம் எனக்கு ஒரு தீர்வு கிடைக்கிறது.” ஆண்களுக்கு மட்டும் தானா? “நான் ஒரு சிங்கிள்… ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? சுய இன்பம் என்பது பொதுவானது. இதற்கு காரணம் ஏதாவது கூற வேண்டும் எனில்… நான் இதுவரை சிங்கிளாக இருக்கிறேன். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.”
மதம்! “எங்கள் மத கோட்பாட்டின் படி பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபட கூடாது. இதனால் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. அதே போல எங்கள் மதம் திருமணத்திற்கு முன்பான உடலுறவையும் தவறு என்கிறது. ஆகையால்… மாற்று தீர்வாக நான் சுய இன்பத்தை கையாள்கிறேன்.” ஆரோக்கியம்! “சுய இன்பம் காண்பது ஆரோக்கியமானது. மேலும், இப்போது நான் ஒரு சிங்கிள். எந்தவொரு உறவில் இணையவும் எனக்கு விருப்பமில்லை. ஆகவே, என்னை நானே திருப்தி படுத்திக் கொள்ள நினைக்கிறேன். சுய இன்பம் காணுதல் அதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. மேலும், இதை நான் ஆரோக்கியமானதாக உணர்கிறேன்.”
குற்றம்! “பள்ளியில் படிக்கும் போது சுய இன்பம் காணுதல் ஒரு குற்றம் என்றே கற்பிக்கப்பட்டேன். சுய இன்பம் காண்பதில் எனக்கு இன்றும் அச்சம் இருக்கிறது. ஆனால், சில முறைகளில் அது மகிழ்ச்சியை அளித்தது. ஆயினும், இணையத்தில் படித்ததை போல நான் பெரிதாக உச்சகட்ட இன்பம் அடைந்ததில்லை. அதற்கு காரணம் எனக்குள் இருக்கும் அச்சம் என்றே கருதுகிறேன். தனிமையில் இருக்கும் போது மட்டுமே எனக்குள் சுய இன்பம் காணும் எண்ணம் எழுகிறது.”
விரக்தி! “எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எப்போதெல்லாம் நான் திருமணம் ஆகாததை நினைத்து விரக்தி அடைகிறேனோ அப்போதெல்லாம் சுய இன்பம் காண முயல்கிறேன். மற்றபடி எனக்கு சுய இன்பம் காணுதலில் ஆர்வம் எல்லாம் இல்லை. என் விரக்தியை வேறு எப்படி சரி செய்வது, தீர்வு காண்பது என்று எனக்கு தெரியவில்லை. இப்போது வரையிலும் சுய இன்பம் காணுதலை மட்டுமே அதற்கான தீர்வாக நான் அறிகிறேன்.”
ரிலாக்ஸ்! “நான் தினமும் சுய இன்பம் காணும் வழக்கம் கொண்டிருக்கிறேன். இது என் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகிறது, எனது அன்றைய நாள் முழுவதும் மன அழுத்தம் உணராமல் இருக்க சுய இன்பம் காணுதல் உதவுகிறது. இதுவரை நான் பெரிதாக பதட்டம் அடையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதுகிறேன்.”
போதை! “எப்போதாவது தலைக்கேறிய போதையில் (ஹேங்கோவர்) இருந்து சீக்கிரம் வெளிவர வேண்டும் எனில் நான் சுய இன்பம் காண்பேன். மேலும், கருவளம் அதிகமாக காணப்படும் அந்த நாட்களில் நான் சுய இன்பம் காணுதலை வழக்கமாக வைத்திருக்கிறேன். உண்மையில் சுய இன்பம் காணுதல் ஒரு சரியான ஸ்ட்ரெஸ் ஃப்ரீ கருவியாகும்.” வேறு வழியில்லை.. “நான் ஒரு ஹை செக்ஸ் டிரைவ் கொண்ட பெண். அதை கட்டுப்படுத்த சுய இன்பம் காணுதலை விட வேறு வழியில்லை. மேலும், கடந்த சில காலமாக எனது உடல்நல பிரச்சனைகளுக்காக நான் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் எனது செக்ஸ் டிரைவை குறைய செய்கின்றன. அதற்கான ஒரே தீர்வாக நான் காண்பது இதை தான். மற்றபடி மன அழுத்தம் குறையவும், சீக்கிரம் உறங்கவும் சுய இன்பம் காணுதல் உதவுகிறது. இதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை