tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறை, கருத்தடை மாத்திரை (அ) கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது என்று நாம் கருதிவிட முடியாது. நாம் உடுத்தும் ஆடைகளில் இருந்து, பயன்படுத்தும் படுக்கை, அறை மற்றும் பிறப்புறுப்பு சுத்தமாக வைத்துக் கொள்தல் என பல விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில், உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு தான் அதிகளவில் பிறப்புறுப்பு தொற்று பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. முக்கியமாக இனபெருக்க பாதையில் தொற்றுகள் ஏற்படலாம்.
உடலுறவில் ஈடுபடும் முன்னரே சிறுநீர் கழித்தவிட்டு சுத்தம் செய்த பிறகு ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் இனபெருக்க தொற்றுகள் ஏற்படாமல் காக்க முடியும்..உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழித்தல் பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் உடலுறவிற்கு பிறகு தொற்றுகள் ஏற்படுத்தும் நச்சுக்கள் இனபெருக்க பாதையை எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாக்க முடியும்.ஆண்களுக்கு பொதுவான பாதை ஆண்களுக்கு விந்தணு மற்றும் சிறுநீர் கழிக்க பொதுவான பாதை மட்டுமே இருப்பதால் நச்சுக்களும் கூட பெண்களின் இனபெருக்க பாதையினுள் செல்ல வாய்ப்புகள் உள்ளன.
பெண்ணுறுப்பை கழுவ வேண்டும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்ணுறுப்பை கழுவ வேண்டியது அவசியம். இதனால் பெண்ணுறுப்பில் தொற்றுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.சிறுது நேரம் இடைவேளை உடலுறவில் ஈடுபட்ட உடனே கழுவ வேண்டாம். சிறிது நேரம் கழித்த பிறகு சுத்தம் செய்தல் வேண்டும். ஏனெனில், உடனடியாக பெண்ணுறுப்பை சுத்தம் செய்வதால் சில சமயங்களில் பெண்ணுறுப்பின் நுழைவில் இருக்கும் விந்தணு உட்சென்று கருத்தரிக்கும் வாய்ப்பு இழக்க நேரிடலாம்.
ஆண்களுக்கு வாய்ப்புகள் குறைவு பெண்களுக்கு சிறுநீர் பாதை மற்றும் இனபெருக்க பாதை வெவ்வேறு ஆகும். எனவே, ஆண்களுக்கு தொற்று ஏற்பட வாய்புகள் குறைவு. ஆனால், ஆண்களுக்கு நாம் மேற்கூறியது போல இரண்டும் பொதுவான பாதையில் வெளியேறுவதால் பெண்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.சிறுநீர் கழித்து சுத்தம் செய்தல் எனவே, உடலுறவிற்கு ஈடுபடும் முன்னர் மற்றும் பின்னர் சிறுநீர் கழித்துவிட்டு, பிறப்புறுப்பை சுத்தம் செய்துவிடுவது நல்லது. மேலும் பெண்களும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பதால் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்