tamilxdoctor, tamil sex doctor, antharagam tamil sex, tamil sex antharankam , tamil sex story , tamil sex kathaikal , tamil sex study
மிகவும் சிறிதளவு பெண்ணுறுப்பில் நோய் தொற்றுகள் உண்டாவது கர்ப்ப காலத்தில் மிகவும் சாதாரணமான ஒரு விஷயம் தான். இந்த சமயத்தில் பிறப்பில் நிறைய ஹார்மோன் மாற்றங்கள் உருவாகும். பொதுவாக, யோனி பகுதியில் உண்டாகும் நோய்த்தொற்றுகள் இந்த கடுமையான மாற்றங்களின் விளைவாகும். ஆனால் அதிஷ்டவசமாக பெரும்பான்மையான நோய் தொற்றுகளை முன் கூட்டியே அடையாளம் கண்டு கொண்டால் அதிலிருந்து எளிதில் வெளிவரலாம்.
1. பாக்டீரியல் வஜினோசீஸ் பாக்டீரியல் வஜினோசீஸ் (Bacterial Vaginosis) அல்லது பிவி என்பது ஒரு மிக முக்கியமான கர்ப்ப கால நோய் தொற்று ஆகும். நான்கில் ஒரு கர்ப்பிணி பெண்களுக்கு இது உண்டாகிறது. பிவி என்பது பெண் உறுப்பு பகுதியில் பாக்டீரியாக்கள் அதிகளவு வளர்ச்சியடைவதால் உண்டாவதாகும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் கர்ப்ப காலத்தில் இது தொந்தரவை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உள்ள பெண்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறப்பது மற்றும் குழந்தை மிக குறைந்த எடையுன் பிறப்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
அறிகுறிகள் வழக்கத்திற்கு மாறான யோனி வெளிப்பாடு ( வெள்ளை, க்ரே, நுரை போன்று அல்லது தண்ணீயாக) மிக அதிகமான துர்நாற்றம், முக்கியமாக உடலுறவுக்கு பின்.. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் பெண் உறுப்பை சுற்றி எரிச்சல் உண்டாதல்
சிகிச்சை உங்களது மருத்துவர் பரிசோதனைகள் மூலம் இதனை உறுதி செய்வார். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் நீங்கள் ஈஸ்ட் தொற்றுக்கு ஆளாகவும் நேரிடும். இந்த பி.வி ஆனாது தொடர்ந்து அதன் அறிகுறிகளை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தால், நீங்கள் உங்களது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. ஈஸ்ட் தொற்று ஆய்வுகளின் படி நான்கில் மூன்று கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஈஸ்ட் பாதிப்பு உண்டாகிறது. ஒரு பெண் தனது வாழ்வில் ஒருமுறையாவது இந்த ஈஸ்ட் தொற்றுக்கு ஆளாகிறாளாம். ஈஸ்ட் தொற்று என்பது பூஞ்சைகளின் அதீத வளர்ச்சியால் உங்களது பெண்ணுறுப்பில் உண்டாகிறது. உங்களது கர்ப்ப காலத்தில் இது அதிகமாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் கூட, கர்ப்ப காலத்தில் இந்த ஈஸ்ட் தொற்று வந்தால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது ஆகும். எனவே சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தாமதம் வேண்டாம்
அறிகுறிகள் அடர்த்தியான, வெள்ளையான யோனி வெளியேற்றம். இது ஈஸ்ட் அல்லது ரொட்டியை போன்ற நாற்றத்தில் இருக்கும். எரிச்சல், சிவந்த நிறம், யோனி மற்றும் வால்வாவில் வீக்கம். சிறுநீர் கழிக்கும் போது வலி உடலுறவின் போது வலி வேதனையான உணர்வு
சிகிச்சை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆன்டி ஈஸ்ட் எதிர்பு க்ரீம்களை பயன்படுத்தலாம். எந்த காரணத்தை கொண்டும் கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் எதிர்ப்பு மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு விட கூடாது. ஏனெனில் இது பிறப்பு கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும்.
3. ட்ரைக்கொமோனஸ் ட்ரைக்கொமோனஸ் (Trichomoniasis) என்பது பரவலாக காணப்படும் எளிதில் சரி செய்துவிடக் கூடிய ஒரு நோய் தான். இது பாலியல் ரீதியாக பரவுகிறது. இதனை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் பிரசவம் முன்கூட்டியே நடப்பது, குழந்தை குறைந்த எடையுடன் இருப்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
அறிகுறிகள் அரிப்பு, எரிச்சல், சிவந்த நிறம், கடுமையான உணர்வு போன்ற அறிகுறிகள் பெண் உறுப்பில் காணப்படும். சிறுநீர் கழிப்பதில் சிரமம் உண்டாகும். யோனியின் வெளிப்பாடானது க்ளியராகவும், வெள்ளை, மஞ்சள், பச்சை போன்ற நிறங்களிலும் வழக்கத்திற்கு மாறான மீன் நாற்றத்துடனும் இருக்கும்.
சிகிச்சை முறை ட்ரைக்கொமோனஸ் என்பது எளிமையாக சரி செய்து விடக்கூடிய ஒன்று தான் இதனை வாய் வழியாக சாப்பிடும் மாத்திரைகளை கொண்டு சரி செய்யலாம். இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.
4. க்ரூம் பி ஸ்ட்ரெப்டோகோகஸ் ஜிபிஎஸ் என்ற பாக்டீரியல் தொற்றானது பல பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனை தான். இது இருதய பிரச்சனைகள், சர்க்கரை நோய் போன்றவற்றின் காரணமாக உண்டாகிறது.
அறிகுறிகள் கர்ப்பிணி பெண்களுக்கு இது இருந்தால் எந்த ஒரு அறிகுறியும் இருக்காது. இதனால் பிரசவத்திற்கு முன்னர் தான் தனது அறிகுறிகளை வெளிக்காட்டும். அல்லது பிரசவத்தின் போது காய்ச்சலை உண்டாக்கும்
சிகிச்சை முறை அனைத்து கர்ப்பிணி பெண்களும் தங்களது கர்ப்ப காலத்தில் ஜிபிஎஸ் டெஸ்டை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை 35 முதல் 37 வாரத்தில் எடுக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் அதனை ஆன்டி பையோடிக்குகள் மூலமாக சரி செய்யலாம்.
சிறுநீர் பாதை தொற்று இந்த சிறுநீர் பாதை தொற்று பாக்டீரியாக்களினால் உண்டாகிறது. நீங்கள் இந்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால் இது சிறுநீரகம் வரை பரவி விடும்.
அறிகுறிகள் சிறுநீர் கழித்தலில் எரிச்சல் மற்றும் வலி இரத்தம் கலந்த சிறுநீர் பின் முதுகு வலி அடிக்கடி சிறுநீர் கழித்தல் காய்ச்சல் தலைசுற்றல் மற்றும் வாந்தி
சிகிச்சை மருத்துவரால் பரிந்துரை செய்யப்பட்ட ஆன்டி பையோடிக்குகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக இந்த தொற்றுகளை தவிர்க்கலாம்.
6. க்ளெமிலியா ட்ரோகோமடிஸ் க்ளெமிலியா ட்ரோகோமடிஸ் (Chlamydia Trachomatis) என்பதும் பாலியலால் பரவக் கூடிய ஒன்று தான். இது முக்கியமாக இளம் பெண்களுக்கு தான் வரும். இது கர்ப்ப காலத்தில் இருந்தால், முன் கூட்டியே குழந்தை பிறப்பு உண்டாகிவிடும். எனவே இதனை முன்கூட்டியே கவனித்து விடுவது என்பது நல்லது
அறிகுறிகள் பெரும்பாலும் இது அறிகுறி இல்லாமல் தான் வரும்.. சில சமயங்களில் மஞ்சள் நிறத்தில் யோனி திரவம் வெளியேறும். இனம் கண்டு கொள்ள முடியாத வலி உண்டாகும். பெண்ணுறுப்பில் இரத்த கசிவு உண்டாகும்
சிகிச்சை முறை பல சமயங்களில் வாய் வழியாக கொடுக்கப்படும் ஆன்டி பையோடிக்குகள் நன்றாக வேலை செய்யும்.
7. சிபிலிஸ் (Syphilis) சிபிலிஸ் என்பது ஒரு சிறுநீர் பாதை தொற்று தான். சிறுநீர் பாதை தொற்றை நீண்ட காலமாக கவனிக்காமல் விட்டுவிடுவதால் இது உண்டாகிறது. இது கர்ப்ப காலத்தில் தாயிடன் இருந்து குழந்தைக்கும் பரவும். இது கரு கலைப்பிற்கும் காரணமாக அமையும். அல்லது குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பது, இறந்து பிறப்பது போன்ற பிரச்சனைகள் இதனால் உண்டாகும்.
அறிகுறிகள் அரிப்பு இல்லாத சரும தடிப்புகள் பெண்ணின் பிறப்பு உறுப்பில் சிறிய தோல் வளர்ச்சி சோர்வு, தலைவலி, மூட்டுக்களில் வலி, காய்ச்சல் எடை குறைதல் முடி உதிர்வு
சிகிச்சை முறை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனை ஆன்டி பையோடிக்குகள் மூலமாக சரி செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
பாதுகாப்பு முறைகள் வந்த பின்னர் ஒரு நோயில் இருந்து தப்பிக்க நடவடிக்கை எடுப்பதை காட்டிலும், ஒரு நோய் வரும் முன்னரே அது வரமால் தடுக்க தேவையானவற்றை செய்து கொள்ளலாம். தொடந்து இது போன்ற தொற்றுகள் வராமல் பாதுகாக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி காணலாம்..
1. உள்ளாடை இறுக்கமாக இல்லாமல், உங்களுக்கு சௌகரியமாக உள்ள உள்ளாடைகளை அணிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் காட்டன் உள்ளாடைகளை அணிந்து கொள்வது என்பது மிகவும் சிறந்ததாகும்.
2. அடக்க வேண்டாம்… சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கி கொள்வது என்பது மிகவும் தவறு. இதனால் சிறுநீர் பாதையில் தொற்றுகள் உண்டாகலாம். எனவே உங்களுக்கு தேவைப்படும் போது எல்லாம் சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியமாகும்.
3. உடலுறவுக்கு பின் உடலுறவுக்கு பின் கண்டிப்பாக சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியமாகும். இதனால் நோய் தொற்றுகளில் இருந்து விடுதலை பெற முடியும்.
4. துடைத்தல் நீங்கள் ஒவ்வொரு முறையும் மலம் சிறுநீர் கழித்த உடனும் உங்களது அந்தரங்க பகுதியின் முன் மற்றும் பின் பகுதிகளை சுத்தமாக துடைத்து விட வேண்டியது அவசியமாகும்.
5. உடை மாற்றம் நீங்கள் உடற்பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சிகளை செய்பவராக இருந்தால், உங்களது பயிற்சி முடிந்ததும் சீக்கிரமாக ஈரமாக உள்ள உள்ளாடைகளை மாற்றிவிட வேண்டியது அவசியமாகும்.
6. யோகார்ட் அந்தரங்க பகுதிகளில் உண்டாகும் தொற்றுகளை போக்க வேண்டும் என்றால் நீங்கள் இயற்கையான யோகார்ட்டை பருகலாம்.
7. சர்க்கரை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உணவில் மிக குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் ஈஸ்ட் பாதிப்பை குறைக்கலாம்.
8. ஆணுறை ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும் ஆணுறை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் பாலியல் ரீதியாக வரும் தொற்றுகளை தவிர்க்கலாம்.
9. பரிசோதனை நீங்கள் கர்ப்பத்திற்கு முன்னரும் பின்னரும் கண்டிப்பாக STD பரிசோதனையை தொடர்ந்து செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.