tamil sex padangal. tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
டிஸ்பரூனியா அல்லது புணர்ச்சி வலி என்பது, உடலுறவின்போது அல்லது அதற்குப் பிறகு பெண்களுக்கு பெண்ணுறுப்பு இதழ்கள், யோனி அல்லது கீழ் இடுப்புப் பகுதிகளில் வலி ஏற்படுவதைக் குறிக்கிறது.
இது பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் பிரச்சனையாகும். பெண்களில் சுமார் 8-22% பேருக்கு இப்பிரச்சனை உள்ளது.
காரணங்கள் மற்றும் ஆபத்துக் காரணிகள் (Causes and risk factors)
காரணங்கள் (Causes)
உடலுறவின்போது வலி உண்டாகப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில உடல் சார்ந்த காரணங்கள், சில மனம் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கலாம்.
போலியான வலி (Superficial pain)
போதுமான வழவழப்பின்மை: பெண்ணுறுப்பில் போதுமான வழவழப்பு இல்லாவிட்டால், வறண்டு காணப்படலாம், இதனால் உடலுறவின்போது வலி உண்டாகலாம். ஃபோர்பிளே குறைவாக இருப்பதாலும் வழவழப்பு போதுமான அளவு வராமல் இருக்கக்கூடும். மாதவிடாய் முற்றிலும் நின்ற பிறகும் தாய்ப்பாலூட்டும் காலத்திலும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவாக இருப்பதாலும், பெண்ணுறுப்பில் வழவழப்பு குறைவாக இருக்கலாம். ஆன்டிஹிஸ்டமினிக் எனப்படும் ஒவ்வாமைக்கான மருந்துகள் போன்ற சில குறிப்பிட்ட மருந்துகளாலும், பெண்ணுறுப்பு தற்காலிகமாக வறண்டு போகக்கூடும்.
நோய்த்தொற்று அல்லது அழற்சி: இனப்பெருக்க உறுப்புப் பகுதியில், பெண்ணுறுப்பில் அல்லது சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலும், உடலுறவின்போது வலி ஏற்படலாம். இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் ஒவ்வாமையால் ஏற்பட்டிருக்கும் கட்டிகளாலும் உடலுறவின்போது வலி ஏற்படலாம்.
காயங்கள், விபத்தில் அடிபடுதல் அல்லது கதிர்வீச்சு: இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் அடிபடுவது, கீழ் இடுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை, பிரசவத்தின்போது ஆசனவாய்க்கும் இனப்பெருக்க உறுப்புக்கும் இடையே அறுக்கப்படுவது அல்லது பெண்ணுறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அப்பகுதியில் அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை போன்றவையும் உடலுறவின்போது வலி ஏற்படக் காரணமாகலாம்.
பெண்ணுறுப்பு தானாக சுருங்குதல் (வேஜினிஸ்மஸ்): அடிபட்டுவிடுமோ என்ற பயத்தில் பெண்ணுறுப்புத் தசைகள் தானாக சுருங்கிவிடுவதாலும் உடலுறவின்போது வலி ஏற்படலாம்.
பிறவிக் குறைபாடு: அரிதாக, சிலருக்கு பிறக்கும்போதே யோனி அல்லது யோனிச்சவ்வு பிரிந்திருக்கும். இதனால் ஏற்படும் தடையால், உடலுறவின்போது ஆணுறுப்பு உள்நுழையும்போது வலி ஏற்படலாம்.
அதிக வலி (Deep Pain)
உடலுறவு போது உணர்ந்த அதிக வலி ஏற்பட இவை காரணமாக இருக்கலாம்:
நோய்த்தொற்றுகள்: கீழ் இடுப்புப்பகுதி அழற்சி நோய்கள், கருப்பைவாய், கருப்பை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்றுகள், சிறுநீர் நோய்த்தொற்று (சிஸ்டைட்டிஸ்).
கீழ் இடுப்புப் பகுதி உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய சில நோய்கள்: கருப்பை உட்படலம் இடமாறுதல் (எண்டோமெட்ரியோசிஸ்), கருப்பை இறக்கம், கருப்பை பிறழ்வு.
கீழ் இடுப்புப் பகுதிகளில் கட்டி போன்றவை: நார்த்திசுக் கட்டிகள், கட்டிகள், இரத்தக்கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவை
வடுக்கள் (வடுத்திசு): இவற்றால் நோய்த்தொற்றுகள், அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சுக்குப் பிறகு கீழ் இடுப்புப் பகுதி உறுப்புகளுக்கு இடையே ஒட்டும் தன்மை ஏற்படும்.
அறிகுறிகளும் அடையாளங்களும் (Signs and symptoms)
வலி இருப்பது போன்று இருக்கும், ஆனால் வலி இல்லாமலும் இருக்கலாம். சிலருக்கு லேசான வலி இருக்கலாம். அதாவது ஆணுறுப்பு உள்நுழையும்போது பெண்ணுறுப்பின் திறப்புப் பகுதியில் வலி இருக்கலாம். ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் முழுவதும் உள்ளே செல்லும்போது அதிக வலி ஏற்படலாம்.
வலி சுருக்கென்று ஏற்படுவதாக இருக்கலாம், எரிச்சல் போன்று இருக்கலாம் அல்லது தசைப்பிடிப்பு வலி போன்றும் இருக்கலாம். வலி இருக்கும்போது, கீழ் இடுப்புப்பகுதித் தசைகள் பிடித்துக்கொண்டு, வலியை இன்னும் தீவிரப்படுத்தலாம். நெருக்கமின்மை, நம்பிக்கையின்மை, இணையரின் மேல் கோபம், கர்ப்பம் குறித்த பயம், தன்னைப் பற்றிய தாழ்வான சுய மதிப்பீடு போன்றவை வலியை மிகவும் தீவிரமாக்கலாம்.
கண்டறிதல் (Diagnosis)
மருத்துவர் பின்வருபவற்றின் அடிப்படையில் இப்பிரச்சனையை உறுதிப்படுத்துவார்:
மருத்துவ வரலாறு: பிரச்சனையின் விவரம், எப்போது, எங்கே வலி தோன்றுகிறது, குறிப்பிட்ட ஏதேனும் இடத்தில் வலி இருக்கிறதா என்பது போன்ற விவரங்கள் கேட்டறியப்படும்.
கீழ் இடுப்புப் பகுதிப் பரிசோதனை: நோய்த்தொற்று அல்லது அழற்சி அல்லது வேறு ஏதேனும் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் உள்ளதா என்று, இனப்பெருக்க உறுப்புப் பகுதி மற்றும் கீழ் இடுப்புப் பகுதி சோதனை செய்யப்படும். பெண்ணுறுப்பு இறுக்கத்தை ஆய்வு செய்வதற்காக, கருப்பை அல்லது சினைப்பைகளில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான அமைப்புகள் உள்ளதா எனப் பார்க்க, விரல் கொண்டு பெண்ணுறுப்பை மருத்துவர் ஆய்வு செய்வார்.
படமெடுத்தல் சோதனைகள்: மேற்கூறிய பரிசோதனைகளில், ஏதேனும் வழக்கத்திற்கு மாறான விஷயங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், கீழ் இடுப்புப் பகுதியில் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யப் பரிந்துரைக்கப்படலாம்.
சிகிச்சை மற்றும் தடுத்தல் (Treatment and prevention)
சிகிச்சை (Treatment)
குறிப்பிட்ட காரணங்கள்
உடலுறவின்போது வலி ஏற்பட, குறிப்பிட்ட காரணங்கள் ஏதேனும் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அவற்றுக்கு சிகிச்சையளிக்கப்படும். பொதுவான காரணங்கள்:
யோனி வறட்சி: மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பெண்களுக்கு, இந்தப் பிரச்சனைக்கு லோக்கல் ஈஸ்ட்ரோஜென் அளித்து சிகிச்சையளிக்கப்படும்.
நோய்த்தொற்றுகள்: ஆன்டிபயாட்டிக் மருந்துகள் அல்லது தகுந்த பிற கிருமி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
நீர்க்கட்டிகள் அல்லது வளர்ச்சிகள்: அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படலாம்.
பிறவியிலேயே பிறழ்ந்த அமைப்புகள்: அறுவை சிகிச்சை மூலம் இவற்றை சரிசெய்வார்கள்.
பிற சிகிச்சைகள் (Other therapies)
லேசான வலிக்கு, பெண்ணுறுப்பில் போதிய வழவழப்பு உண்டாகும் வரை அதிக நேரம் ஃபோர்பிளேவில் ஈடுபடுவது அல்லது அதிக வழவழப்புக் கூட்டும் பொருளைப் (நீர் சார்ந்தவை) பயன்படுத்துவது பலன் கொடுக்கும். சில சமயம், உணர்விழக்கச்செய்யும் ஆயின்ட்மென்ட் பயன்படுத்துமாறு அல்லது இடுப்புக் குளியல் எடுக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
அதிக வலி இருப்பவர்களுக்கு, வழக்கத்திற்கு மாறாக வெவ்வேறு நிலைகளில் உடலுறவு கொள்ளப் பரிந்துரைக்கப்படும். அதாவது ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் அதிக ஆழத்தில் நுழைந்து முட்டாதபடியான நிலைகள் சில சௌகரியமாக இருக்கலாம்.
வாய்வழி புணர்ச்சி அல்லது கைகளைப் பயன்படுத்துதல் என்று அவரவர்க்கு விருப்பமான வழிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படலாம்.
கீழ் இடுப்புப்பகுதி தசைகள் தசைச்சுருக்கம் அடைவதைத் தடுப்பதற்காக, பயோஃபீட்பேக் மற்றும் கீழ் இடுப்புப் பகுதி தளர்த்தும் பயிற்சிகள் செய்ய மருத்துவர் பரிந்துரைப்பார்.
விழிப்புணர்வு அடிப்படையிலான அறிவாற்றல் சிகிச்சை (MBCT) போன்ற பிற அறிவாற்றல் நடத்தை சிகிச்சைகள் போன்ற உளவியல் சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படலாம்.
தடுத்தல் (Prevention)
யோனி வறண்டுபோவதைத் தடுக்க வேண்டும்
இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
உடலுறவைக் குறித்த பயத்தினால் பெண்ணுறுப்புத் தசைகள் இறுக்கமாகும் பிரச்சனை இருந்தால், நிபுணர் ஆலோசனை அவசியப்படலாம்
சிக்கல்கள் (Complications)
வழக்கமாக, பெண்கள் உடலுறவின்போது வலி ஏற்படுகிறது என்பதற்காக, மருத்துவர்களிடம் செல்லமாட்டார்கள். இதனால் அவர்களின் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும், உறவும் பாதிக்கப்படும்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உடலுறவின்போது தொடர்ந்து வலி இருந்தால், உங்கள் மருத்துவரிடம் சென்று உங்கள் பிரச்சனை பற்றிப் பேசவும்.
எச்சரிக்கை (Red Flags)
பின்வரும் அறிகுறிகள் இருந்தால், மகளிர் நலவியல் மருத்துவரிடம் செல்லவும்:
காய்ச்சல், அடிவயிற்றில் வலி, பெண்ணுறுப்பில் இரத்தக்கசிவு, நீர்ச்சுருக்கு, உடலுறவில் ஈடுபடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரிடம் செல்லவும் அவை, கீழ் இடுப்புப் பகுதி அழற்சி நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம்.
உடலுறவில் ஈடுபடுவதில் சிரமம் இருந்து, அதனால் உங்கள் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்லவும்.