புண்டை அரிப்பு – காரணங்களும் சிகிச்சையும்

6450

அரிப்பு என்பது ஒரு அசௌகரியமான உணர்வு, அதிலிருந்து விடுபட சொறிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.

பெரும்பாலான பெண்கள் பெண் மருத்துவரிடம் ஆலோசிக்க வரும் ஒரு பொதுவான பிரச்சனை பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பு என்பது. இந்த அரிப்பு பெண்ணுறுப்பு முழுவதும் இருக்கலாம் அல்லது பெண்ணுறுப்பின் வெளி இதழில் மட்டும் இருக்கலாம்.

சில சமயம் பெண்களுக்கு இந்த பெண்ணுறுப்பு அரிப்பு என்பது அவ்வப்போது வந்து தானாக சரியாகலாம். அதுவே இடைவிடாமல் அரிப்பு தொடர்ந்து இருந்தால், ஈண்டும் மீண்டும் வந்தால், அல்லது கடுமையாக இருந்தால், அல்லது வெள்ளைப்படுதல் போன்ற வேறு அறிகுறிகளும் உடனிருந்தால் அது பிரச்சனையாகிப் போகும்.

பெண்ணுறுப்பில் அரிப்பு ஏற்படக் காரணங்களில் சில (Causes of vaginal itching include):

நோய்த்தொற்றுகள்: கேன்டிடா (யீஸ்ட்) நோய்த்தொற்று, பாக்டீரிய வேஜிநோசிஸ், ட்ரைக்கோமோனியாசிஸ் (புரோட்டோசோவா நோய்த்தொற்று)அரிதாக, சிலசமயம் ஆசனவாயில் ஊசிப்புழுக்கள் இருப்பதால் பெண்ணுறுப்பின் வெளி இதழ்ப்பகுதியில் அரிப்பு ஏற்படலாம்.

எரிச்சல் ஏற்படுத்தும் பொருள்கள்: சில சமயம் ரசாயனப் பொருள்களோ அல்லது வேறு பிற பொருள்களோ பெண்ணுறுப்பின் வெளி இதழ்ப்பகுதியில் பட்டு, அதனால் சருமம் பாதிக்கப்பட்டு அதனாலும் அரிப்பு ஏற்படலாம் (இதனை இரிட்டன்ட் காண்டாக்ட் டெர்மட்டைட்டஸ் என்பர்). இதற்கான எடுத்துக்காட்டுகள் சில:

சிந்தட்டிக் அல்லது இறுக்கமான உள்ளாடை அணிவதால் அதிகமாக வியர்த்தல், ஈரமாதல்.
சோப்புகள், சலவை சோப்புகள், ஃபேப்ரிக் சாஃப்டனர்கள், ப்ளீச் போன்றவை.
ஆணுறைகள், கருத்தடை நுரை.
வியர்வையைக் குறைக்கும் பொருள்கள் (ஆன்டிபெர்ஸ்பிரென்ட்), பெண்களுக்கான ஹைஜீன் ஸ்ப்ரே, பெர்ஃபியூம் போன்றவை.
மாதவிடாய் நாப்கீன்கள், மாதவிடாய் கப் போன்றவை.
அதிகமாக கழுவுதல், அல்லது நீர் பீய்ச்சியடித்துக் கழுவுதல்.
தோல் மடிப்பு, இறுக்கமான உடை அல்லது உடலுறவால் ஏற்படும் உராய்வு.
சிறுநீர் அல்லது மலம்.
ஹார்மோன் தொடர்பான காரணங்கள்: பருவமடைவதற்கு முன்பும் மாதவிடாய் நின்ற பிறகும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் தேவைக்கும் குறைவாக இருந்தால் அதனால் பெண்ணுறுப்பின் மேலுறையில் வறட்சி ஏற்பட்டு அரிப்பு ஏற்படலாம்.

தோல் கோளாறுகள்: அட்டாபிக் டெர்மடைட்டஸ், சொரியாசிஸ், லிச்சென் ஸ்கெலரோசிஸ், லிச்சென் சிம்ப்லெக்ஸ், லிச்சென் பிளானஸ், சிபோறிக் டெர்மடைட்டஸ்.

பிற காரணங்கள்: அரிதாக சில புற்று நோய்கள் மற்றும் நரம்புப் பாதிப்புகளாலும் அரிப்பு ஏற்படலாம்.

பெண்ணுறுப்பில் அரிப்பு ஏற்படக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? (How is vaginal itching treated?)

மருத்துவ வரலாறு: பெண்ணுறுப்பு அரிப்புக்கு என்னென்ன காரணங்கள் சாத்தியமாக இருக்கலாம் என்பதை ஆராய்ந்து அறிவதற்காக, மருத்துவர் உங்கள் கடந்தகால மருத்துவ விவரங்களைக் கேட்டறியலாம்
பெண்ணுறுப்பைப் பரிசோதித்தல்: உடலியல் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா எனப் பார்க்க, பெண்ணுறுப்பும் பிறப்புறுப்பும் ஆய்வு செய்யப்படும்.
தோல் பரிசோதனை: பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்புக்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பதை அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா எனப் பார்க்க தோல் ஆய்வு செய்யப்படும்.
உரசி செய்யும் சோதனை: பாதிக்கப்பட்ட பகுதியிலும் பெண்ணுறுப்பிலும் இருந்து சிறிதளவு மேற்பரப்பு உரசி எடுக்கப்பட்டு, நுண்ணுயிர்கள் உள்ளதா எனப் பரிசோதிக்க, ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
தோல் திசுச் சோதனை: தோலில் எதுவும் வெளிப்படையாகத் தெரியும் பிரச்சனை இருப்பதாகத் தெரியாவிட்டால், தோலின் திசு ஆய்வு செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
ஒவ்வாமைச் சோதனை: ஏதேனும் குறிப்பிட்ட பொருளுக்கு உங்களுக்கு ஒவ்வாமை உள்ளதா என அறிய, பேட்ச் சோதனைகள் செய்யப்படும்.
பெண்ணுறுப்பு அரிப்புக்கான சிகிச்சை (How is vaginal itching treated?)

இதற்கான சிகிச்சை, அந்த அடிப்படைப் பிரச்சனையைப் பொறுத்தது. பெண்ணுறுப்பு அரிப்புக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

நோய்த்தொற்றுக்கெதிரான மருந்துகள்: நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க, ஆன்டிபயாட்டிக், ஆன்டிஃபங்கல் அல்லது ஆன்டிவைரல் மருந்துகள் கொடுக்கப்படலாம்.

மேற்பூச்சு ஸ்டீராய்டு: அழற்சி மற்றும் ஒவ்வாமைப் பாதிப்புகளைக் குறைக்க இந்த மருந்துகள் கொடுக்கப்படும்.

வாய்வழி ஹிசுட்டமின் மருந்துகள்: அரிப்பில் இருந்து நிவாரணம் பெறவும் ஒவ்வாமையைக் குறைக்கவும் இந்த மருந்துகள் கொடுக்கப்படும்.

வீட்டில் பின்பற்ற வேண்டியவை (Home care measures)

தினமும் ஓரிரு முறை இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளை நீரால் கழுவி சுத்தம் செய்யவும். கடினமான சோப்புகளைப் பயன்படுத்த வேண்டாம், அதிகமாக நீரைப் பீய்ச்சியடித்துக் கழுவ வேண்டாம்.
இனப்பெருக்க உறுப்புப் பகுதியை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்துக்கொள்ளவும்.
குளியலில் நனைந்த ஆடை, உடற்பயிற்சி செய்யும்போது அணிந்திருந்த ஆடைகள் போன்ற ஈரமான உடைகளை கூடிய விரைவில் மாற்றவும்.
பெர்ஃபியூம், இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளின் சுகாதாரத்திற்கான தயாரிப்புகள், அழகுப் பொருள்கள் போன்றவற்றை இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
சரியான அளவுகொண்ட, நல்ல உறிஞ்சும் திறனுள்ள உள்ளாடைகளை அணியவும்.
இறுக்கமான ஆடையால் உராய்வு ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
கூடியமட்டும், இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளில் சொறிவதையும் தேய்ப்பதையும் தவிர்க்கவும்.
தோல் வறண்டுபோவதால் அரிப்பு ஏற்பட்டிருந்தால், ஈரப்பசை அளிக்கும் கிரீம் (எமால்லிமென்ட்), பெரியார் ப்ரிபரேஷன் போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
சேனிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றவும்.
உங்களுக்கு நீரிழிவுநோய் இருந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும், இதனால் யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

Previous articleஒன்னும் தெரியாது என்று பார்த்தல் எல்லாமே செய்கிறாள்
Next articleமுதலிரவுக்கு மனைவியை ஓக்க முன்னால் இதை எல்லாம் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!