tamil sex, tamilsex , Tamilsex.com , tamil kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , antharangam , tamil kamasutra tamilxdoctor , tamil sex doctor
வாசெக்டமி சிகச்சை ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்தி விடுமா?
வாசெக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யும் சிறிய மாறுதல் ஆகும். இந்த அறுவை சிகிச்சையின் போது ஆண்களின் விந்தணுக்களை சுமந்து செல்லும் இழை நாளக் குழாயை அடைத்து விடுகின்றனர்
இதனால் விந்தணுக்கள் பெண்ணுறுப்புக்குள் பாய்வது தடைபட்டு கருத்தரிப்பது தவிர்க்கப்படுகிறது. இது ஒரு எளிதான நிரந்தர கருத்தடைப்பு முறையாகும்.
ஆண்களுக்கான இந்த கருத்தடை முறை இரண்டு விதமாக செய்யப்படுகிறது
இன்ஸிஸன் முறை மற்றொன்று நோ-கட் முறை நோ-கட் முறை இந்த வகையில் ஆண்களின் பிறப்பிறுப்பில் எந்த வித கீறல்களும் இல்லாமல் செய்வதால் தொற்று க்கள் ஏற்பட வாய்ப்பு குறைவு, மேலும் சில நாட்களிலேயே காயங்களும் ஆறி விடும். ஆனால் இந்த வாசெக்டமி பற்றிய விழிப்புணர்வு நிறைய ஆண்களுக்கு இருப்பதில்லை. மேலும் இதைப் பற்றிய தவறான கண்ணோட்டம் தான் ஆண்களிடையே நிலவுகிறது. எங்கே இதனால் விறைப்புத்தன்மை செயலிழப்பு ஏற்பட்டு விடுமோ என்று ஆண்கள் எண்ணுகின்றனர்.
விறைப்புத்தன்மை செயலிழப்பு உண்மையை சொல்லப் போனால் இது குறித்து எல்லா ஆண்களும் மிகுந்த பயத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் இதைப் பற்றிய தெளிவான விளக்கம் கண்டிப்பாக எல்லா ஆண்களுக்கும் தேவைப்படுகிறது.
கருத்தடை வாசெக்டமி என்பது ஒரு சாதாரண கருத்தடை முறை மட்டுமே. ஆண்களின் விந்தணுக்கள் பெண்களின் பிறப்பிறுப்பில் செல்லாத வண்ணம் செய்யக்கூடிய ஒரு முறை மட்டுமே. இதனால் உங்கள் விறைப்புத்தன்மை, விந்தை வெளியேற்றுவதில் எந்த வித பிரச்சினையும் இருக்காது. இதில் இருக்கும் ஓரே ஒரு வித்தியாசமான விந்தணு திரவத்தில் எந்த வித விந்தணுக்களும் இல்லாமல் இருக்கும். உயிரணுக்கள் இல்லாததால் கருத்தரிப்பது நடக்காது.இதனால் பெண்ணுறுப்புக்குள் விந்தணுக்கள் செல்வது தடைபட்டு கருத்தரிப்பது தவிர்க்கப்படுகிறது. இது தான் வாசெக்டமி என்பது.
விறைப்பு நீங்கள் வாசெக்டமி செய்த பின்னரும் கூட உங்கள் உடலுறவு வாழ்க்கை இயல்பாகவே இருக்கும். இதனால் எந்த மாற்றமும் தோன்றாது. உங்களுடைய விறைப்புத்தன்மை வாசெக்டமிக்கு முன்னாடி இருந்த மாதிரியே தான் இருக்கும். அதே மாதிரி வாசெக்டமி உங்கள் உடலுறவு இன்பத்தை, விந்தணு திரவம் வெளியேறும் போது ஏற்படும் உணர்தல் போன்றவற்றை ஒரு போதும் குறைக்காது. இதனால் உங்கள் இல்லற வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்காது
பாதிப்புகள் வாசெக்டமி செய்த பிறகு அரிதாக சில பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசித்து பெற்றுக் கொள்ளுங்கள்.இந்த பாதிப்புகள் தொற்றுகளாலோ அல்லது காயங்கள் ஆறாமல் இருப்பதாலோ ஏற்படலாம். மற்றபடி இதில் பெரிதான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. இரத்தக் கசிவு, விதைப்பையில் இரத்தம் கட்டுதல், விதைப்பையில் சிராய்ப்பு, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஏற்படும் தொற்று, வீக்கம், லேசான வலி மற்றும் அசெளகரியம் ஏற்படுதல்.
அரிதான விளைவுகள் நாள்பட்ட வலி தொற்று களால் விந்தணுக்கள் வெளியேறுவது வாசெக்டமி சிகச்சை தோல்வியுறுவதால் கருத்தரிப்பு ஏற்படுவது விந்தணு திரவத்தை வெளியேற்றும் போது வலி சுருட்ட குழாயின் மேற்புறத்தில் நீர்க்கட்டிகள் உருவாகுதல் விதைப்பையை சுற்றி நீர்கோர்த்து இருத்தல் மருத்துவரை எப்போது அணுக வேண்டும் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. தொற்று ஏற்பட்ட இடத்தின் வெப்பநிலை 100.4 F க்கு அதிகமாக இருந்தால், இரத்தம் கட்டி போய் வீக்கம் வலி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. வாசெக்டமிக்கு அப்புறம் உங்கள் மருத்துவர் கூறும் வழிமுறைகளை 6-12 வாரங்கள் தவறாமல் கடைபிடிங்கள். வாசெக்டமி அறுவை சிகிச்சைக்கு பிறகு உங்கள் விந்தணு திரவத்தை கூட விந்தணுக்கள் இருக்கிறதா என்பதை நீங்கள் பரிசோதித்து கொள்ளலாம். மைக்ரோஸ்கோப் வழியாக விந்தணுக்கள் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து சொல்வார்கள்.
நீண்ட கால பக்கவிளைவுகள் நீண்ட கால பக்கவிளைவுகள் ரெம்ப அரிதாகவே காணப்படுகிறது. பெரும்பாலும் இந்த மாதிரியான பக்க விளைவுகள் வாசெக்டமி சிகச்சைக்கு பிறகு ஏற்படுவதில்லை.
அசெளகரியம் மற்றும் வலி வாசெக்டமிக்கு பிறகு எதாவது வலி மற்றும் அசெளகரியம் ஏற்படுதல். அறுவை சிகிச்சைக்கு பிறகு விந்தணு திரவத்தில் விந்தணுக்கள் இருப்பது, சில சமயங்களில் முடிச்சு போடப்பட்ட இழை நாளக் குழாய்கள் வளர்ந்து விடுவது போன்றவை வாசெக்டமி தோல்வியை ஏற்படுத்தி விடும்.
விரை நாளம் அழற்சி விதைப்பைகளுக்கு பின்னாடி விரை நாளம் என்பது அமைந்துள்ளது. இது தான் இழை நாளக் குழாய் வழியாக விந்தணுக்களை செலுத்துகிறது. வாசெக்டமி சிகச்சையில் இந்த இழை நாளக் குழாய்கள் வெட்டப்படுவதால் விந்தணுக்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இந்த விந்தணுக்கள் திரும்பவும் விரை நாளத்திற்கு சென்று விடுவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
வாச-வீனஸ் ப்ஸிஸ்டுலா விந்து இழை நாளங்கள் ஏராளமான இரத்த குழாய்களை கொண்டுள்ளது. வாசெக்டமி செய்யும் போது அந்த இரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இரத்தம் கட்டு ஏற்பட்டு அங்கே ப்ஸிஸ்டுலா ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் சிறுநீர் வழியாக இரத்தக் கசிவு போன்ற பாதிப்புகள் அரிதாக ஏற்படலாம். இந்த நிலை இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
க்ராணுலோமா இந்த பாதிப்பில் விந்தணுக்கள் தேங்கி ஒரு கட்டி மாதிரி உருவாகுதல் ஏற்படும். இந்த நீர்க்கட்டிகள் 1 மில்லி மீட்டர் – 1 சென்டி மீட்டர் வரை வடிவத்தில் வேறுபடலாம். இதனால் கட்டி இருப்பதற்கு எந்த வித அறிகுறிகளும் ஏற்படாது. அது தான் இதில் இருக்கும் பிரச்சனையே. சில அரிதான நிலையில் க்ராணுலோமா பகுதியில் வலி ஏற்படலாம். இந்த நீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
சிகிச்சைக்கு பிறகு பராமரிப்பு நீங்கள் வாசெக்டமி செய்த பிறகு சில வழிமுறைகளை பின்பற்றி ஆக வேண்டும். சிகச்சை காயங்கள் ஆறும் வரை கவனமாக மருத்துவர் கூறும் ஆலோசனை படி கேட்டு நடக்க வேண்டும். சில நாட்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் பேண்டேஜ் போடப்படும். இறுக்கமான உள்ஆடைகள் அணிவதை இரண்டு நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். முதல் இரண்டு நாட்களுக்கு விதைப்பையில் ஜஸ் கட்டிகள் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்த பிறகு சில நாட்கள் ரெம்ப கடினமான உடற்பயிற்சி வேலைகளை மேற்கொள்ள கூடாது 24 மணி நேரமாவது நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு உடலுறுவில் ஈடுபடக் கூடாது.