திருமணம் ஆகி ஒராண்டு காலம் இருந்ததுபோல தற்போது மனைவிக்கு இயல்பாக செக்ஸ் மூட் வராமல் இருக்க காரணம் என்ன என பல கணவர்கள் சந்தேகத்தில் இருப்பர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆர்வமில்லாமல் ஏதோ கடமைக்கு கணவனின் ஆசைக்கு ஒத்துழைத்து விட்டு திரும்பி படுத்து உறங்குவிடும் மனைவியை பார்க்கும்போது பல கணவர்கள் ஏமாற்றம் அடைவர். இதனால் கணவன் மீது மனைவிக்கு ஈர்ப்பு குறைந்துவிட்டது என நினைப்பது தவறு. அதற்கான காரணங்களைப் பார்ப்போமா?
குழந்தை பெற்ற பிறகு ஆறேழு வாரத்திற்கு பெண்களுக்கு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இதற்கு பிரசவத்தின் போது அவர்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட கிழிசல் காரணமாக இருக்கின்றது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு அரவணைப்பாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
முதல் முறை குழந்தை பெற்ற பிறகு தான் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்க ஆரம்பிக்கும். சிலருக்கு அளவிற்கு அதிகமாக பால் சுரக்கும். சிலருக்கு குறைவாக பால் சுரக்கும். எனவே, இதனால் சிலர் அசௌகரியமாகவும், சிலர் சற்று கடினமாக / வலியுடன் காணப்படுவர்.
அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடிவயிற்றில் அந்த காயம் ஆறுவதற்கு ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். எனவே, இந்த ஆறு மாதங்களும் நீங்கள் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடல்வாகு சற்று மாறும். முக்கியமாக வயிறு பகுதி சற்று தொளதொளவென்று இருக்கும். இந்த உடல்வாகு மாறும் வரை அல்லது சற்று பழைய நிலைக்கு ஃபிட் ஆகும் வரை பெண்கள் உடலுறவில் ஈடுபட தயங்குவார்கள்.
சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு பிறப்புறுப்பு சற்று விரிவடைந்திருக்கும். இது, பழைய நிலைக்கு திரும்ப நான்கைந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, அதுவரை தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
குழந்தை பெற்ற பிறகு, பெண்களின் உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால், தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அவர்கள் சற்று வலியுடன் உணர்வார்கள். இதை, கணவன்மார்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மாறாக அவர்களை வற்புறுத்துவது, உடல் ரீதியாக வலியை தாங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மன ரீதியான வலியும் சேரும்படி ஆகிவிடும்.
மெனோபாஸ் காலங்களில் மூட் ஸ்விங் ஏற்படும். அப்போது சில பெண்களுக்கு அதீத செக்ஸ் ஆர்வமும் சில பெண்களுக்கு மிக மிகக் குறைந்த செக்ஸ் ஆர்வமும் இருக்கும். சில பெண்கள் செக்ஸின்போது முரட்டுத்தனமாக நடந்துகொள்வர். கணவனையும் அவ்வாறு செய்ய வலியுறுத்துவர். சில பெண்கள் உறவு முடிந்து விந்து வெளியானதும் கண்ணீர் விட்டு அழுவர். இது தற்காலிக மாற்றம் தான். பின்னர் ஹார்மோன்கள் சரியான பின்னர் இயல்புநிலைக்கு வரத் துவங்குவர்.
சில பெண்களுக்கு மாமியார், மாமனார், நாத்தனார் உள்ளிட்டவர்கள் இருக்கும் சிறிய பிளாட்டில் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பர். இவ்வாறு வாழும் பெண்களுக்கு ஆர்வம் குறையும். 40 வயதுக்கு மேல் கணவனுடன் உறவு கொள்வது பெரியர்களுக்குத் தெரிந்தால் தவறாக எண்ணுவர் என அவர்கள் நினைப்பர். இதனால் படிப்படியாக ஆர்வம் குறையும்.
மேலும் சில பெண்களுக்கு வெளியூரில் கணவன் வசிப்பதால் செக்ஸ் ஆர்வம் குறையும்.
இந்தியா போன்ற கலாசார முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் பல பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருக்கவே செய்கிறது. மேலை நாடுகள் போல 60, 70 வயதுவரை செக்ஸில் ஈடுபடுவது, தினமும் செக்ஸில் ஈடுபடுவது, உணர்ச்சிகளை வெளிப்படுத்தி செக்ஸ் வைத்துக்கொள்வது உள்ளிட்டவை நம் நாட்டில் அநாகரிகமாக பார்க்கப்படுகின்றன. இதனாலேயே பெண்கள் தங்கள் செக்ஸ் இச்சைகளை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.
செக்ஸ் ஆர்வம் குறையாமல் பாதுகாக்க கணவன் – மனைவி இருவரது ஒத்துழைப்பும் அவசியம். முடிந்தவரை மனைவியுடன் சேர்ந்து வாழ்வது நல்லது. வேலை நிமித்தமாக பிரிந்து வாழ்வது இன்று பல குடும்பங்களில் நடக்கிறது. இதனை முடிந்தவரை தவிர்த்தால் செக்ஸ் வாழ்க்கை பேரின்பமாக அமையும்.