tamil kama sutra, tamil kamasutra, Tamil sex, tamil sex padangal. tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
ஆயிரம் ஆசைகள், எதிர்பார்ப்புகளுடன் தான் தம்பதிகள் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொடங்குகிறார்கள். ஆனால், நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் புதியதாக, வித்தியாசமானதாக அமைகிறது.
பல நேரங்களில் வாழ்க்கைப் போக்கு கணவன்-மனைவி எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இருக்கிறது. அதனால் போகப்போக, வாழ்க்கை சலிப்பாகி விடுகிறது. திருமணம் செய்ததே தவறோ என்று எண்ண வைத்துவிடுகிறது.
இதற்கு தீர்வுதான் என்ன?
திருமண உறவில் நிலையாக இருப்பது என்பது `டிரைவிங் லைசென்ஸ்’ பெறுவதுபோலத்தான். நீங்கள் காரை ஓட்ட விரும்பினால் நிச்சயம் சாலை விதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எப்போதுமே பாதசாரியாகவே பயணிக்க வேண்டும்.
உங்களுக்கு அன்பு, நட்பு, செக்ஸ் மற்றும் அக்கறையுடன் கவனிக்க ஒரு துணை வேண்டுமென்றால் பதிலுக்கு நீங்களும் எதையேனும் கொடுத்தாகத்தானே வேண்டும். ஆதலால் ஆண்கள், பெண்ணின் எதிர்பார்ப்புகளையும், பெண்கள், ஆணின் குணாதிசயங்களையும் புரிந்து கொள்வது அவசியமாகி விடுகிறது.
ஆண்களின் மனநிலையும், பெண்களின் மனநிலையும் எந்த இடத்தில் வேறுபடுகிறது என்பதை புரிந்து கொண்டால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தடுத்து விடலாம்.
ஆண்கள், எதையும் மிக ஆழமாக தெரிந்து வைத்துக்கொள்வது கிடையாது. ஆண்களால் எதைப்பற்றியும் பேசாமல் நீண்ட நேரத்தை கழிக்க முடியும். பேசிக் கொண்டால் ஒரு விஷயத்தைப் பற்றிய விளைவுகள், தீர்வுகள் பற்றி மட்டுமே உரையாடுவார்கள். மனிதர்கள் மற்றும் அவர்களது உணர்வுகளைப் பற்றி கலந்துரையாடுவது குறைவு.
ஆண்கள் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கே மற்றவர்களை சந்திக்கிறார்கள். அதனால் நண்பர்களுடன் இருந்தால்கூட பேசாமலே (மற்றவர்கள் பேசுவதை கேட்டு) மனதை `ரிலாக்ஸ்’ ஆக்கிக் கொண்டு திரும்பி விடுவார்கள்.
ஒரு ஆய்வில் தெரியவந்த உண்மை என்னவென்றால், வேலை முடிந்ததும் 85 சதவீத ஆண்கள் மன அழுத்தம் குறையும் செயல்களை நோக்கிச் செல்கிறார்களாம். அதில் 9.5 சதவீதம் பேர் மது அருந்தச் செல்கிறார்கள்.
“ஆண்கள் விளையாட்டில் காட்டும் தீவிர ஆர்வத்தை, ஏன் காதலில் வெளிப்படுத்த மாட்டேன் என்கிறார்கள்” என்று பெண்கள் நினைக்கக் கூடும்.
திருமணத்தை அனேக ஆண்கள் துரதிருஷ்டமாக, தங்கள் சுதந்திரம் பறிபோகும் ஒரு நிகழ்வாக கருதுகிறார்கள். `திருமண விலங்கு போட்டுவிட்டதால் இனி தும்முவதற்குகூட அனுமதி பெற வேண்டும்` என்று நண்பர்கள் அவர்களை கேலி செய்வார்கள். எனவே பெண்ணிடம் நெருக்கமாக இருப்பது, பெண்களுக்கு வாக்கு கொடுப்பது போன்றவற்றை விரும்புவதில்லை.
தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்ற எண்ணம் ஆண்களிடம் அதிகம். இது ஒரு ஆண் வளர்ந்த விதத்தைக் குறிக்கிறது. அவன் வளரும்போதே தான் முன்னோடியாக நினைக்கும் சூப்பர்மேன்போலவே தன்னை எண்ணிக் கொள்கிறான்.
அதனால் தனது செயலை சுட்டிக்காட்டி ஒரு பெண் கேள்வி கேட்டால் அவனால் தாங்க முடியாது. அவள் தன்னை திருத்த முயல்வதாகவும், தான் தவறாக நடப்பதை சுட்டிக்காட்டுவது போலவும் அவன் நினைத்துக்கொள்வான். பெண் கேள்வி கேட்டால், `நீ என்னை நம்பவில்லையா?’ என்று அவன் திருப்பிக் கேட்பான். பொதுவாக ஒரு பெண் தனக்கு அறிவுரை வழங்குவதை அவனால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆண்களின் மூளை அமைப்பே ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்யும் வகையில் தான் அமைந்துள்ளது. வலது மூளை, இடது மூளையை இணைக்கும் கார்ப்பஸ் கலோசம் பெண்களைவிட 30 சதவீதம் குறைவான அளவிலேயே ஆண்களின் இரு மூளையையும் இணைக்கிறது. இதுவே அவர்கள் பலவற்றையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாததற்கான காரணமாகும்.
எனவே இல்லத்தரசிகளுக்கு கணவரின் மூலம் வெற்றி கிட்ட வேண்டும் என்றால் அவருக்கு ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் கொடுத்துப் பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள். காதல் உணர்வுடன் கணவன் பேசிக் கொண்டிருந்தால், அவனிடம் கேள்வி கேட்பதோ, பிரச்சினைக்குரிய விஷயம் பற்றி விவாதிக்கவோ தொடங்காதீர்கள்.
இனி பெண்களைப் பற்றி ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்.
பெண்கள் பொதுவாக அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். எப்போதுமே ஒரு பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விரும்புவார்கள். சில விஷயங்களை மிகைப்படுத்தி மகிழ்ச்சி காண்பார்கள். நேரடியாக விஷயத்திற்கு வராமல் சுற்றி வளைத்துப் பேசுவது பெண்களின் வாடிக்கை. எதையும் ஆழமாக அறிந்து கொள்ளும் ஆவலும் பெண்களுக்கு உண்டு.
பெண்கள் ஆதிமுதலே குடும்பத்துடன் இருக்கவும், சேர்ந்து வாழவும், உறவுகளை வளர்க்கவும் பழக்கப்பட்டவர்கள். ஆதலால் மற்றவர்களுடன் பரஸ்பரமாக பேசி நட்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. அதனால் இப்போதும்கூட எங்கிருந்தாலும் பிறருடன் பேசி தொடர்பு வைத்திருப்பதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.
பேச்சு, மொழிக்கான பயன்பாட்டில் பெண்களின் மூளை அதிகமாக செயல்படும். பெண்கள், நீங்கள் சொல்ல வருவதை விரும்பினால் மட்டுமே உங்களிடம் பேசுவார்கள். அவள் உங்களை விரும்பினால் எல்லாவற்றையும் பேசிக் கொண்டே இருப்பாள்.
பெண் பேசுகிறாள் என்பதால் உங்களை பிடித்துப்போனதாக எண்ணிக் கொள்ளக்கூடாது. அது ஒரு பிணைப்புக்காக மட்டுமே. நீங்கள் அவளை ஊக்கப்படுத்தினால் நிச்சயம் உறவு பலப்படும்.
பிரச்சினையைப் பற்றி பெண் பேசத் தொடங்கினால், அவளுக்கு உதவவும், அவர் சொல்வதை கேட்கவும் நீங்கள் தயாராக இருப்பதை புரிய வையுங்கள். அவள் பேசுவதை கேட்க முடியாவிட்டால் கூட கொஞ்சம் அவகாசம் கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள்.
ஆண்கள் எப்போதுமே புள்ளிவிவரங்களை மிகைப்படுத்திக் கூறும் பழக்கம் உள்ளவர்கள். தனது வேலையின் முக்கியத்துவம், சம்பளம் பற்றி மிகைப்படுத்திக் கூறலாம். ஆனால் பெண்கள் உறவு சார்ந்த விஷயங்களையே உணர்ச்சிவசப்பட்டு அதிகமாகப் பேசுவார்கள்.
ஒருவிஷயத்தை உங்கள் மனைவி மிகைப்படுத்துகிறாள் என்றால் பிறர் முன்னிலையில் அதை சுட்டிக் காட்ட வேண்டாம். பெண்கள், ஆண்கள் விஷயங்களை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஆண்கள், பெண்களிடம் பேசும்போது உண்மையை மட்டுமே பேசவும், மிகைப்படுத்துதலைக் குறைக்கவும் வேண்டும்.
பெண்கள் நிறைய விஷயங்களை சுற்றி வளைத்துப் பேசுவார்கள். தனது தேவை என்ன என்பதை ஆண் ஊகித்துக்கொள்ள வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்ப்பார்கள். அது உண்மையும் கூட. மறை முகமான பேச்சு பிணக்கை ஏற்படுத்தாமல் பிணைப்பையும், தேவையையும் நிறைவேற்றும் என்பது பெண்களின் எண்ணம். அது ஆதிக்கம் செலுத்துவதையோ, சண்டையிடுவதையோ தடுக்கிறது.
ஆனால் மறைமுகப் பேச்சை மற்றொரு பெண்ணால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். ஆணிடம் இப்படிப் பேசினால், `நீ என்ன சொல்ல வருகிறாய், உனக்கு என்னதான் வேண்டும், பேச்சை நிறுத்து’ என்றெல்லாம் சொல்லி பிரச்சினையை முற்றச் செய்து விடுவதுண்டு.
பெண்கள், ஆண்களுடன் நேரடியாகப் பேச வேண்டும். ஆண்கள், பெண்களின் பேச்சை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவள் கூறுவதை மட்டும் கேளுங்கள். எதிர்த்து பேசவோ தீர்வு சொல்லவோ கிளம்பாதீர்கள்.
பெண், தன் கணவரிடம் `என்னை எவ்வளவு நேசிக்கிறாய்’ என்று கேட்டால், விலை உயர்ந்த பரிசை எதிர்பார்ப்பதாக கருதுகிறார்கள். `ஒன்றுமில்லை’ என்று அவர்கள் சொன்னால் ஏதோ விஷயம் இருப்பதாக அர்த்தம். நீங்கள் சொல்வதை, `ஓ’ என்று கேட்டால், நீங்கள் பேசுவதில் பொய் இருப்பதை கண்டுகொண்டாள் என்று அர்த்தம்.
பெண், உறவுகளை பாதுகாக்கும் பணியில் இருப்பதால் தன்னை கவனிக்கும் நெருங்கியவர்களின் தொடர்பை பெருக்கிக் கொள்ள விரும்புவாள். குடும்பத்தோடு இணைந்து கொள்வதில்தான் பெண்ணின் வாழ்வு இருக்கிறது.
பெண்கள் அதிகமான விஷயங்களை துளைத்துக் கேட்டுத் தெரிந்து கொள்வது உறவுகளை நிலைநிறுத்த தேவையானது என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள், அதிக விவரங்களை கேட்டுக் கொண்டிருப்பது அனாவசியமானதல்ல, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணவே என்பதை கணவர் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.
இப்படி ஆண்-பெண் புரிதல் எளிதாகி விட்டால் அங்கே பிரச்சினைகளுக்கான பாதை அடைபட்டு விடும்.