காமசூத்திரம் சொல்லும் அற்புதமான கலவி முறை!

510

தம்பதிகளுக்கான மிகவும் எளிய முறை என்பது உடலுறவு கொள்ளும்போது… அவர்கள் ஒரு உடலுறவின் புனிதத் தன்மையை அனுபவிக்க வேண்டும் என்பதே. அனைத்து மதங்களும் உடலுறவின் புனிதத் தன்மையை அழித்துவிட்டன. அவர்கள் அதை ஒரு பாவச் செயல் என்று சொல்லி கண்டித்தார்கள்.

பழக்கப்படுத்துதல் மனிதனின் மனதிற்குள் ஆழமாக பதிந்துவிட்டது. எனவே, முடிந்தவரை விரைவாக முடித்துவிட வேண்டும் என்று விரும்புவது போல அனைவரும் மிகவும் விரைவாக உடலுறவு கொள்கிறார்கள்.

இயற்கையிலேயே, அது பாவச்செயலாக இருந்தால், அதை விரைவாக முடித்து விடுவதுதான் நல்லது. அவர்களுடைய இதயம் குற்ற உணர்வால் நிரப்பப்பட்டுள்ளது. அவர்களது மனம் முழுவதும் பாவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. தம்பதிகள் உடலுவில் ஒரு தியான முறையை அனுபவிக்க விரும்பினால்.. முதலில் அவர்கள், அது ஒரு பாவச் செயல், அது தவறானது என்ற கருத்தை கைவிட வேண்டும்.

உண்மையில் அது அளவுகடந்த அழகு பொருந்தியது. அது உயிர்வாழ்வதற்காக இயற்கை அளித்துள்ள மாபெரும் பரிசு. அதனை நீங்கள் குற்றமாக உணரக் கூடாது. நீங்கள் அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில் அதற்காக ஒரு விசேஷமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஜோடியும் தங்களால் இயன்ற அளவு, உடலுறவுக்காக மட்டுமே ஒரு தனியறையை கொண்டிருக்க வேண்டும். அங்கு மனைவி வேறொருவராக இருக்கக்கூடாது. அங்கு எந்தவிதமான வாக்குவாதமோ, சண்டைச் சச்சரவோ இருக்கக் கூடாது. தலையணையை எறியக் கூடாது.

அவர்கள் குளித்து விட்டு ஒரு கோவிலுக்குள் போவதைப் போல அந்த அறைக்குள் செல்ல வேண்டும். அந்த அறை முழுவதுமாக நறுமணமிக்க ஊதுத்திகளை கொளுத்தி வைக்க வேண்டும். அங்கு பிரகாசமான விளக்குகள் இருக்கக் கூடாது. மெழுகுவர்த்திகள், மங்கலான விளக்குகள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் அவசரத்தில் இருக்கக் கூடாது.

ஏனெனில் முன்விளையாட்டு என்பது மிகமிக முக்கியமானது. பெண்ணின் உடல் முழுவதுமே பாலுணர்வை தூண்டக் கூடியது என்ற காரணத்திற்காக இதனைச் செய்ய வேண்டும். ஆணின் உடல் முழுவதும் பாலுணர்வை தூண்டக் கூடியதல்ல. ஆணுடைய பாலுணர்வு ஒரு குறிப்பிட்ட இடத்திலானது. அது அவரது இனப்பெருக்க உறுப்பை மட்டுமே வரம்பாகக் கொண்டது.

ஆனால் பெண்ணின் உடல் முழுவதும் பாலுணர்வை ஏற்படுத்தக் கூடியது. அவளது உடல் முழுவதும் மகிழ்ச்சியால், இன்பத்தால் நடுங்காவிட்டால்… அவளுக்கு உச்சநிலை ஏற்படவில்லை என்று அர்த்தம்.

தியான டெக்னிக் என்பது, ஒருவர் மற்றொருவரின் உடலில் விளையாடும்போது, அவர்கள் ஒரு சாட்சியாக இருப்பதாகும். அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. எனவே, அங்கு நான்குபேர் இருப்பார்கள், இருவரல்ல.

அந்த பெண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை, அந்த ஆண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை. அந்த சாட்சி, ஆண் பெண்ணிடம் என்ன செய்கிறார், பெண் ஆணிடம் என்ன செய்கிறார் என்பதை கவனித்துக் கொண்டிருப்பதாகும். அந்த சாட்சி எது நல்லது கெட்டது என்று தீர்மானிப்பதாக இருக்காது. அது வெறும் கண்ணாடியைப் போன்றது. என்ன நடக்கிறது என்பதை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும்.

இந்த சாட்சி என்பது அறிதல், விழிப்புணர்வு, உணர்வு நிலையேயாகும். குறிப்பாக முன்விளையாட்டில், நீங்கள் உணர்வுடன், விழிப்புணர்வுடன் இருந்தால், உடலுறவு கொள்ள உங்கள் உடல் தயாராகும் சரியான நேரம் எது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. நீங்கள் இருவரும் மற்றவரின் உடல் வெளியிடும் பயோஎலக்ட்ரிசிட்டியை உணர்வீர்கள்.

நீங்கள் உடலுறவு கொள்ளும்போது அவசரப் படக்கூடாது. எப்போதுமே பெண்கள் மேலே இருக்க வேண்டும். இந்த உலகிலேயே மோசமான நிலை என்றால் மிஷினரி பொசிஷனே ஆகும். கிழக்கில் அவர்கள் வரும் வரை ஆண்கள் பெண்களுக்கு மேலே இருக்கலாம் என்று யாருக்கும் தெரியாது. இது மிருகத்தனமானது. மிகவும் அசிங்கமானது.

பெண்கள் மென்மையானவர்கள். ஒரு பெரிய மிருகம், ஒரு அப்பாவி பெண் மீது தண்டால் எடுத்தால் என்னாவது? இந்தியாவில் இது மிஷனரி பொசிஷன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் இது அறிமுகமானது. இதுவும் சாத்தியமே என்று அவர்கள் இந்தியாவுக்கு செய்து காட்டினார்கள்.

இல்லாவிட்டால், எப்போதுமே பெண்கள்தான் மேலே இருந்திருப்பார்கள். அறிவியல் ரீதியாக பெண்கள் மேலே இருப்பதுதான் சரி. அப்போதுதான் அவளால் அதிகமாக இயங்க முடியும். ஆண்கள் குறைவாக இயங்கலாம். ஆண் மேலே இருந்தால் பெண் அதிகம் இயங்க முடியாது. ஆண் அதிகமாக இயங்குவார். அவர் அதிகமாக இயங்கினால் விரைவில் விந்து வெளிப்படும் நிலைக்கு வந்துவிடுவார்.

ஆனால் பெண், தான் உச்சநிலையை அடையும் நிலைக்கு வந்திருக்க மாட்டார். பெண் மேலே இருந்து அவள் அதிகமாக இயங்கினால் ஆண் இயக்கமில்லாமல் இருப்பார். பெண் உச்சநிலையை அடையும்போது ஆணும் உச்சநிலையை அடைவார்.

அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைந்தால்.. அங்கு ஒரு அற்புதமான சந்திப்பு, இணைப்பு ஏற்படுகிறது. அங்கு உடல்கள் மறைந்து விடுகின்றன. அப்போது இரண்டு ஆன்மாக்கள் இரண்டாக இருப்பதில்லை. இருவர் இருவராக இருப்பதில்லை. அதேவேளையில் சாட்சி தொடர்கிறது. அதுதான் உங்கள் உள்ளே நடைபெறும் தியானம். அது தொடரும், நீங்கள் சாட்சியாக இருந்து வருவீர்கள்.

உங்கள் உச்சநிலை அடங்கிய பின்னர், அது மெள்ள மெள்ள மறைவதை கவனியுங்கள். அது மேலே வருவதை கவனியுங்கள். அது வெடித்துச் சிதறுவதைக் கவனியுங்கள். அது மீண்டும் உங்கள் உடலின் சாதாரண நிலைக்கு திரும்புவதை கவனியுங்கள். அதன்பின் அவசரப்பட்டு இருவரும் பிரிந்து விடாதீர்கள். சிறிது நேரம் ஒன்றாக இணைந்தே இருங்கள்.

தந்த்ராவில் இது பள்ளத்தாக்கு உச்சநிலை என்று சொல்லப்படுகிறது. கோடிக் கணக்கானோருக்கு இது பற்றித் தெரியாது. முதல் உச்சநிலை என்பது உச்சத்தில் ஏற்படும் உச்சநிலை. நீங்கள் இருவரும் உங்கள் சக்தியின் உச்சத்தில் இணைந்தீர்கள். இப்போது உச்சம் மறைந்துவிட்டது. ஆனால் உச்சம் தன் அருகிலேயே பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்கு இல்லாமல் உச்சி இருக்காது.

எனவே, உங்களால் அமைதியாக, ஒன்றாக இருந்து கவனித்து வர முடிந்தால், நீங்கள் மற்றொரு உச்சநிலையை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். மற்றொரு உச்சநிலை ஏற்படும். இது முற்றிலும் மாறுபட்ட அழகு கொண்டது. வேறுபட்ட ஆழம் கொண்டது. ஒரு வித்தியாசமான வேலை. பள்ளத்தாக்கு உச்சநிலை. பள்ளத்தாக்கு உச்சநிலை மறையும் வரை நீங்கள் இருவரும் பிரியாதீர்.

இதற்கிடையில், சாட்சி கவனிப்பது தொடர்கிறது. பிரியும்போது தூங்கச் செல்லாதீர்கள். ஒரு முக்கியமான விஷயம் இன்னமும் இருக்கிறது. அதுவே பின்விளையாட்டு. நீங்கள் உங்கள் இருவரின் உடல்-மன சக்தியைக் கொண்டு ஒரு மாபெரும் கலப்பை ஏற்படுத்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் ஒருவருக்கொருவர் உடலை மசாஜ் செய்ய வேண்டும். மற்றவரின் உடலில் விளையாட வேண்டும்.

நறுமணமிக்க ஊதுபத்திகள், அழகிய மலர்கள், மெழுகுவர்த்திகள், இசை இருக்கும்போது.. நீங்கள் ஆட விரும்பினால் நீங்கள் ஆடலாம்.

ஆனால் சாட்சிநிலை தொடர வேண்டும். ஏன் சாட்சி நிலை தொடரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றால்.. நீங்கள் பலமுறை அவ்வாறு செய்தால், ஒருநாள் நீங்கள் வெறுமனே சாட்சியாக இருக்க மட்டுமே முயற்சிப்பீர்கள். ஆண், பெண் என்ற தன்மையில்லாமல் தனியாக.

அதே அறையில், அதே சூழலில். அதே ஊதுபத்தி, அதே நினைவை ஏற்படுத்தும் ஊதுபத்தி இருக்கும்போது, அதே விளக்கு, அதே சந்தர்ப்பத்தில், நீங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பெரும் ஆச்சரியத்தை காண்பீர்கள். பெண்ணுக்குள் ஏற்படும் அனைத்தும் பெண் இல்லாமலேயே அல்லது ஆண் இல்லாமலேயே உங்களுக்குள்ளும் நடக்க ஆரம்பிக்கும்.

நீங்கள் மெள்ள உச்சநிலையை நோக்கி செல்ல ஆரம்பிப்பீர்கள். அதே அனுபவம். ஆனால் உடல், பயோலாஜிக்கல் வெளிப்பாடு எதுவும் இல்லாமல். நீங்கள் பள்ளத்தாக்கு உச்சநிலையையும் அடைவீர்கள். அதே அனுபவம். அப்போது நீங்கள் உடலுறவின் மூலமாக தியானத்தை கற்றுக் கொள்வீர்கள். அதேபோல தியானத்தின் மூலம் உடலுறவை கற்றுக் கொள்வீர்கள்.

இது ஒவ்வொன்றும் மற்றொன்றை அடைந்தவாறு செல்லும். இது இருவருக்கும் பக்குவத்தை தரும். இந்த பக்குவம் அவர்களது அடக்கப்பட்ட அறிவு, விழிப்புணர்வு, அன்பு, இரக்கத்தை உருவாக்கும். மேலும் இது பொறாமை, கோபம், வெறுப்பை கொல்லும். இது உங்களுக்குள் மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும். அந்த மாற்றங்களே நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான ஆதாரமாகும்.

Previous articleநடிகை மீனா கல்லூரி மாணவனுடன் அனுஸ்கா!
Next articleகாம சூத்ரா உடலுறவு முறைகள் விளக்கம்!