aankalin antharanka kuraipaadu, aankalin vinthu utpathi, aankalukku viraippu piracchani, aanmai kurai erpada karanam, ankalin vinthu kaddi aaka, antharanga kelvi, antharangam, Best Sex Positions and Kama Sutra, fist night
தாம்பத்தியம் என்பது உடலும் மனமும் சேர்ந்த விஷயம். இதை தம்பதிகளின் அந்தரங்க விஷயம் என்றே சொல்லலாம். ஆண், பெண் இருபாலருக்கும் தாம்பத்தியத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு இருக்கும். அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கும். தாம்பத்தியம் என்றால் என்ன? அதில் எப்படி ஈடுபட வேண்டும்? ஈடுபட்டு முடித்தவுடன் என்ன செய்யலாம் என்பதை அறிந்திருப்பார்கள். ஆனால், தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை நிறுத்தினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். இங்கு தாம்பத்தியத்தை நிறுத்தினால் பெண்களின் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் மாற்றங்களை பற்றி பார்க்கலாம்.
இறுக்கம்
குழந்தையை பிரசவித்தால் பெண்ணுறுப்பு விரிவடையும், உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்தினால் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடும் போன்ற மூடநம்பிக்கைகள் பரவலாக காணப்படுகின்றன. இவை முழுவதும் தவறான கருத்துக்கள். பெண்ணுறுப்பு விரிவடைந்தாலும், இறுக்கினாலும் எலாஸ்டிக் போன்று மீண்டும் பழைய நிலைக்கு திருப்பிவிடும்.
இடைவெளி
சிறிய இடைவெளிக்கு பிறகு உடலுறவில் ஈடுபட்டால் எதிர் செயல் மேலோங்குதல், உச்சம் அடைதல் போன்றவை ஏற்படும் என சிலர் கருதுகின்றனர். பெண்கள் மூளையில் சுரக்கும் சுரப்பியை பொறுத்தே பெண்கள் உச்சமடையும் நிகழ்வு ஏற்படும். இடைவெளி கொண்டால் ஆசை அதிகரிக்குமே தவிர, உச்சம் காண்பது, இன்பம் போன்றவை அதிகரிக்கும் என கூற முடியாது.
வலி
உடலுறவு மற்றும் சுய இன்பம் போன்றவற்றில் ஈடுபடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு அதிக வலி ஏற்படும். உண்மை தான், உடலுறவு மற்றும் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிப்படும் எடோர்பின் வலி நிவாரணியாக செயல்படும் தன்மை கொண்டது. இது தடைப்படும் போது அதிக வலி ஏற்படலாம்.
தவிர்ப்பது
சிலர் உடலுறவின் போது பெண்ணுறுப்பில் ஏற்படும் வலியால், உடலுறவை தவிர்ப்பார்கள். பெண்ணுறுப்பு சிறிதாக இருந்தால் உடலுறவின் போது வலி ஏற்படும். அப்படி இருப்பவர்கள், உடலுறவில் ஈடுபடும் போது முன்விளையாட்டுகளில் ஈடுபட்டுவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் வலி ஏற்படாது. சில நேரங்களில், அந்தரங்க உறுப்பு தொற்று காரணமாகவும் வலி ஏற்படலாம். இதற்கு தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.
வறட்சி
சில பெண்களின் பெண்ணுறுப்பு வறட்சியுடன் காணப்படும். இதனால், உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம். இதற்கு ஈரத்தன்மையை ஏற்படுத்த எண்ணெய் அல்லது மசகு பொருட்களை பயன்படுத்துங்கள். இது உராய்வு எற்படும்போது எரிச்சல் அல்லது வலி உண்டாகாமல் இருக்க உதவும். இதற்காக உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றில்லை.
அதிவேகம்
பெண்ணுறுப்பும் தசைகளால் உருவான ஓர் உடல் உறுப்பு என்பதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். உறவில் ஈடுபடும் போது அதிக வேகமாக செயல்படுதல் பெண்களுக்கு அதிக வலியை உண்டாக்கும். இதனால் அவர்கள் மறுமுறை உறவில் ஈடுபட தயங்கவும், பயப்படவும் செய்வார்கள்.