இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் கிளாமிடியா நோய்த்தொற்று!

288

tamil sex doctor , Antharangam | Tamildoctor,aankalin antharanka kuraipaadu, aankalin vinthu utpathi, aankalukku viraippu piracchani

கிளமீடியா டிராக்கோமாட்டிஸ் (C.trachomatis) என்பது பாலியல் தொடர்பால் பரவக்கூடிய ஒரு பொதுவான பாக்டீரிய நோய்த்தொற்றாகும். இது ஆண்கள், பெண்கள் என இருபாலரையும் பாதிக்கலாம். ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களின் இடுப்புப்பகுதி அழற்சி நோய் மற்றும் குழந்தையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு கிளாமிடியா நோய்த்தொற்றே முக்கியக் காரணமாக உள்ளது. இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் கிளாமிடியா நோய்த்தொற்றை குணப்படுத்த முடியும்.

ஒவ்வொரு வருடமும் உலகளவில் 10 கோடி பேர் கிளாமிடியா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவமனைகளில் செய்த கணக்கெடுப்பின்படி, பால்வினை நோயாளிகளில் 19.9% பேருக்கும், பெண்நோயியல் (கைனகாலாஜி) துறையின் புறநோயாளிகளில் 23% பேருக்கும் கிளாமிடியா நோய்த்தொற்று இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

காரணங்கள் (Causes)

இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் கிளாமிடியா நோய்த்தொற்று பெரும்பாலும் இளைஞர்களையும் பல நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்பவர்களையும் பாதிக்கிறது. பாதுகாப்பற்ற (ஆணுறை பயன்படுத்தாத) உடலுறவு, பாதுகாப்பற்ற வாய்வழிப் புணர்ச்சி போன்றவற்றின் மூலமே கிளாமிடியா நோய்த்தொற்று அதிகம் பரவுகிறது.

இனப்பெருக்க உறுப்புகள் ஒன்றை ஒன்று தொடுவதன் மூலமும் பாக்டீரியா பரவக்கூடும். குதவழிப் புணர்ச்சி மூலமும் பரவக்கூடும்.

தாய்க்கு கிளாமிடியா நோய்த்தொற்று இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் ஏற்படலாம்.

ஆபத்துக் காரணிகள் (Risk Factors)

கிளாமிடியா நோய்த்தொற்றுடன் தொடர்புடைய ஆபத்துக் காரணிகள் சில:

இளம் வயது (15-24)
பலருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுதல்
தடுப்பு முறை கருத்தடை முறைகளை (ஆணுறைகள் போன்றவை) தொடர்ந்து பயன்படுத்தாமை
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது (கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது, ஆனால் பெண்களுக்கே இந்நோய்க்கான சோதனை அதிகம் செய்யப்படுகிறது என்பதாலும் இப்படி இருக்க வாய்ப்புள்ளது)
சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பது
இளம் பெண்களுக்கு (20 வயதுக்குக் குறைவானவர்கள்) இந்நோய்த்தொற்று அதிகம் ஏற்படுகிறது, வயதான பெண்களுக்கும் இளம் பெண்களுக்கும் கருப்பை வாய்ப்பகுதியின் அமைப்பில் உள்ள வேறுபாடே இதற்குக் காரணமாக இருக்கலாம். அதாவது இளம் பெண்களுக்கு, கருப்பை வாய்ப்பகுதியில் உள்ள செதில் செல்களும் செங்குத்து செல்களும் சந்திக்கும் புறத்தோல் பகுதி வெளியே அதிகம் நீண்டிருக்கிறது. இதனால் எளிதில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறது.

அறிகுறிகள் (Symptoms)

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் தோராயமாக 70-80% பேருக்கும், ஆண்களில் தோராயமாக 50% பேருக்கும் கிளாமிடியா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை.

ஆண்களுக்கு, கிளாமிடியா நோய்த்தொற்றால் பின்வரும் பிரச்சனைகள் ஏற்படலாம்:

யூரித்ரைட்டஸ் (சிறுநீர்ப்பைக் குழாய் அழற்சி): சிறுநீர் கழிக்கும்போது, எரிச்சல், சிறுநீர்ப்பைக் குழாயில் இருந்து ஏதேனும் திரவம்/பசை போன்ற பொருள் வெளியேறுதல்.
பெலனைட்டஸ் (ஆண்குறி மொட்டில் ஏற்படும் அழற்சி): ஆண்குறி மொட்டைச் சுற்றிலும் சிவப்பாதல், எரிச்சல் ஏற்படுதல், தோல் தடிப்பு, அரிப்பு ஏற்படுதல்.
மீட்டைட்டஸ் (ஆண்குறி முனையில் இருக்கும் சிறுநீர் திறப்பில் ஏற்படும் அழற்சி): சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீர் திறப்புப் பகுதி சிவத்தல்.
புரோக்டைட்டஸ் (மலக்குடலில் ஏற்படும் அழற்சி): மலக்குடல் பகுதியில் வலி, மலக்குடலில் இருந்து திரவம்/பசை போன்ற பொருள் வெளியேறுதல், மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுதல்.
பெண்களுக்கு, கிளாமிடியா நோய்த்தொற்றால் பின்வரும் பிரச்சனைகள் ஏற்படலாம்:

செர்விசைட்டஸ் (கருப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் அழற்சி): பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுதல், உடலுறவின்போது வலி, அடிவயிற்றில் வலி, மாதவிடாய் இரத்தப்போக்கில் இடையூறுகள்.
இடுப்புப் பகுதி அழற்சி: பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுதல், உடலுறவின்போது வலி, அடிவயிற்றில் வலி, மாதவிடாய் இரத்தப்போக்கில் இடையூறுகள், காய்ச்சல் போன்றவை.
நோய் கண்டறிதல் (Diagnosis)

உங்களுக்கு பாலியல் ரீதியான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்றும், இதற்கு முன்பு பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளீர்களா என்பது பற்றிய விவரங்களையும் மருத்துவர் உங்களிடம் கேட்டறியலாம்.

சில சோதனைகளைச் செய்து, கிளாமிடியா நோய்த்தொற்று உள்ளதா என்று கண்டறியலாம். பெண்களுக்கு, கருப்பை வாய்ப் பகுதியில் இருந்து லேசாக மேற்பரப்பில் உரசி, மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும். ஆண்களுக்கு, சிறுநீர்ப்பைக் குழாயின் மேல் லேசாக உரசி மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும், இந்த மாதிரியைச் சோதித்து, கிளாமிடியா நோய்த்தொற்று இருக்கிறதா என்று கண்டறியப்படும்.திட்டவட்டமாகக் கண்டறிய, செல் கல்ச்சரில் உள்ள நுண்ணுயிர்களைத் தனிப்படுத்தி ஆய்வு செய்யப்படும்.

ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும், காலையில் முதல் முறை வெளியேறும் சிறுநீரின் மாதிரியைக் கொண்டு சில பிரத்யேக பரிசோதனைகளைச் செய்து கிளாமிடியா நோய்த்தொற்று இருப்பதைக் கண்டறியலாம்.

டைரக்ட் இம்மியுனோஃப்ளூரசென்ஸ் சோதனை, ELISA (enzyme linked immunosorbent assay), உயிரணுவியல் (சைட்டாலாஜி, உடலில் உள்ள செல்களின் பகுப்பாய்வு) போன்றவையே இந்தச் சோதனைகள்.

சிகிச்சை (Treatment)

கிளாமிடியா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவர் குறிப்பிட்ட காலத்திற்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகளை உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். இதற்கு பல்வேறு ஆண்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

முக்கியமான மருந்துகள்:

அசித்ரோமைஸின்
டாக்ஸிசைக்லின்
பிற மருந்துகள்:

எரித்ரோமைசின் பேஸ்
எரித்ரோமைசின் எத்தில் சக்ஸினேட்
லிவோஃப்லோக்சேஸின்
ஆஃப்ளோக்சேசின்
தடுத்தல் (Prevention)

கிளாமிடியா நோய்த்தொற்று வராமல் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன:

எப்போதும், உடலுறவின்போது (வாய்வழிப் புணர்ச்சி, இயல்பான புணர்ச்சி அல்லது குதவழிப் புணர்ச்சி எதுவாக இருந்தாலும்) ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் முன்பு, ஆண் பெண் இருவருமே மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொண்டு, யாருக்கும் பால்வினை நோய்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாலியல் தூண்டல் சாதனங்கள் (செக்ஸ் டாய்ஸ்) எதையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
மேலும் படிக்க (Read More)

சிக்கல்கள் (Complications)

கிளாமிடியா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டால் பின்வருபவை போன்ற சில சிக்கல்கள் ஏற்படலாம்:

இடுப்புப் பகுதி அழற்சி நோய் (PID) – கருப்பை மற்றும் ஃபெல்லோப்பியன் குழாய்களில் ஏற்படும் நோய்த்தொற்று.நோய்த்தொற்று கடுமையாக இருந்தால், அது ஃபெல்லோப்பியன் குழாய்களையும், அண்டகங்களையும் கருப்பையையும் சேதப்படுத்தலாம்.
குழந்தையின்மை: ஃபெல்லோப்பியன் குழாய்களில் அழற்சி மற்றும் வடுக்களை கிளாமிடியா நோய்த்தொற்றுகள் ஏற்படுத்தக்கூடும். இதனால் குழாய்களில் தடை ஏற்பட்டு குழந்தையின்மைக்கு வழிவகுக்கலாம்.
விந்தகங்களில் அழற்சி: ஆண்களுக்கு, கிளாமிடியா நோய்த்தொற்று விரை முனைப்பையைப் (எப்பிடிட்டிமைஸ், அதாவது விந்தகங்களில் இருந்து விந்தைக் கொண்டு செல்லும் குழாய்கள்) பாதிக்கலாம். இந்தப் பிரச்சனையை எப்பிடைட்டிமைட்டஸ் என்று குறிப்பிடுகின்றனர். நோய்த்தொற்று விந்தகங்களையும் பாதித்திருந்தால், அதை எப்பிடிடியோ-ஆர்ச்சைட்டஸ் என்கிறோம். இந்தப் பிரச்சனை விந்தகங்களில் மிகுந்த வலியைக் கொடுக்கும், இதற்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். எப்பிடிடிமோ-ஆர்ச்சைட்டஸ் பிரச்சனைக்கு சரியான சிகிச்சை வழங்காவிட்டால் அது ஆணின் குழந்தை பெறும் திறனைப் பாதிக்கலாம்.
புரோஸ்டாடைட்டஸ்: ஆண்களுக்கு கிளாமிடியா நோய்த்தொற்று புரோஸ்டேட் சுரப்பியையும் பாதிக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீர் ஒழுகுதல், உடலுறவின்போதும் அதற்குப் பிறகும் அசௌகரியம் போன்றவை இதன் அறிகுறிகள்.
பால்வினை நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரித்தல்: கிளாமிடியா நோய்த்தொற்று இருப்பவர்களுக்கு மேகவட்டை நோய் (கொணோறியா), எய்ட்ஸ் போன்ற பிற அபாயங்களின் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ரெய்ட்டர் நோய்க்குறித்தொகுப்பு (எதிர்வினையுள்ள கீல்வாதம் (ஆர்த்ரைட்டிஸ்)): இது கிளாமிடியா நோய்த்தொற்றால் ஏற்படும் ஒரு அரிதான சிக்கல், இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீர்ப்பாதை, கண்கள் மற்றும் மூட்டுகளில் அழற்சி ஏற்படும்.
கர்ப்பம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள்: ஒரு பெண்ணுக்கு கர்ப்பத்தின்போது கிளாமிடியா நோய்த்தொற்று இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் அது இருக்க வாய்ப்புள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, கிளாமிடியா நோய்த்தொற்றினால், நிமோனியா (நுரையீரல் நோய்த்தொற்று), விழி வெண்படல நோய் (கஞ்சங்டிவைட்டிஸ் எனப்படும் கண் நோய்த்தொற்று) போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டபிறகு ஆண்குறி/பெண்ணுறுப்பில் இருந்து திரவம்/பசை போன்ற பொருள் வெளியேறினால் அல்லது சிறுநீர் கழிக்கும்போது அசௌகரியம் ஏற்பட்டால் அல்லது உங்களுடன் உறவு வைத்துக்கொள்பவருக்கு கிளாமிடியா நோய்த்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

எச்சரிக்கை (Red Flags)

சிறுநீர் கழிக்கும்போது அசௌகரியம், இனப்பெருக்க உறுப்பில் இருந்து திரவம்/பசை போன்ற பொருள் வெளியேறுதல், மாதவிடாய் அல்லாத நாட்களில் இரத்தக் கறைபடுதல், அடிவயிற்றில் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீங்கள் இடுப்புப்பகுதி அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது, எனவே மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

Previous articleகாமத்தில் உதட்டோடு உதடு வைத்து உரச நீங்க ரெடியா?
Next articleபூல் ஊம்பும் இளம் ஆண்டிகளின் படங்கள்!