பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்…
இப்பிரச்சினைக்கான கார ணங்கள்….
# இயல்பாகவே சில பெண்களுக்கு செக்ஸில் அவ்வளவாக நாட்டமிருக்காது. உடலுறவு என்பது அவர் களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது.
# செக்ஸில் நாட்ட மில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது.
# விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.
# உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள்.
# முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில், குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக
அமையலாம்.
# உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது, வெறித்தனமான நடவடிக்கைகளைக் கையாள்வது என்றெல்லாம் நடந்து கொள்கிற போதும் மனைவிக்கு செக்ஸின் மீது வெறுப்பு ஏற்படலாம்.
# கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.
# குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள். தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள்.
# தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.