முதுகில் புத்தகப்பையை. சுமந்து வந்த.. யுகநிதாவைப் பார்த்ததும். ..
” ஊப்ஸ். ” எனப் பெருமூச்சு விட்டாள் மலருதா !
” என்னடி ஆச்சு. ? ” மெல்லிய குரலில் கேட்டாள் யுகநிதா !
” சொல்றேன் நட.. ” என அவளைத் தள்ளிப் போனாள் !
இருவரும் பள்ளியை நோக்கி நடந்தனர் .நெருக்கமாக நடந்தவாறு கேட்டாள் .
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : Muki Lan
” லெட்டரக் குடுத்தியாடி. ? ”
” ம். ” தலையசைத்தாள் மலருதா. ” ஆனா ஒரே டென்ஷனா இருக்கு. ”
” ஏன்டி. ? ”
” லெட்டரக் குடுக்கறப்ப. . அவங்கப்பா வந்தட்டாரு.”
” ஐய்யய்யோ. ! பாத்துட்டாரா?”
” ம். பாத்துட்டார்னுதான் நெனைக்கறேன்.. ! நா ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன் .. இனி என்னாகும்னு தெரியல.”
” ச. ! என்னடி நீ. இப்படி பண்ணிட்ட .. ? ”
” ஏய். .நா வேணும்னு எதும் பண்ணலடி. நம்ம நேரம் இப்படி ஆகிருச்சு. .. ”
” ச்ச. போடி. ”
” ஏய். . லெட்டரக் குடுத்தவ நானு. நீ ஏன்டி தேவையில்லாம டென்ஷனாய்க்கற. ?”
” லூசு .. அதுல என் லெட்டரும் இருக்கில்ல. லெட்டர் விவகாரம் தெரிய வந்துட்டா..?”
” ஓ.. ஆமால்ல. ! என்னடி பண்றது இப்ப. .. ? ”
” அந்த கடவுள்தான் நம்மள காப்பாத்தனும். ..”
” ஆமாடி நீயும் ப்ரே பண்ணு. ‘சேவ் மி காட் ‘னு. ”
உடனே சட்டென நின்று. கண்களை மூடினாள் யுகநிதா !
நடந்து கொண்டிருந்தவள் நின்றதும். . திகைத்து அவள் கையைப் பிடித்தாள் மலருதா !
” நடுரோட்டுல நின்னாடி ப்ரே பண்ணுவாங்க. ? ”
” இப்ப நாம கோயிலுக்கு போக முடியாதில்ல. அதான். .! நீயும் ப்ரே பண்ணிக்க .. ” என பயத்துடன் சொன்னாள் .. !!
மலருதாவும். .. யுகநிதாவும் பயந்தது போல எதுவும் நடந்து விடவில்லை. சுதனும். .
அவன் அப்பாவும் எப்போதும் போலவே இருந்தனர் !
ஆனாலும் இவள்களது கடிதங்களுக்கு மட்டும் பதில் இல்லை ?
” என்னடி நாம லெட்டர் குடுத்து ஒரு வாரமாச்சு . அவங்ககிட்டேர்ந்து எந்த பதிலும் வராம இருக்கு ? ” எனக் கவலையோடு கேட்டாள் யுகநிதா!
” அதான்டி எனக்கும் புரியல.. ” என யோசணையோடு சொன்னாள் மலருதா !
” சுதன கேட்டுப் பாரேன் . ”
” ம் .. சரி வா . அவங்க வீட்டுக்கு போய்ட்டு வரலாம் ” மலருதா கூப்பிட ..
” நானும் வரனுமா ? ” ? என பயத்துடன் கேட்டாள் யுகநிதா !
” சீ. பயந்து சாகாம வா. . ” என அழைத்துப் போனாள். !
இருவரும் தயங்கித் தயங்கித்தான் படியேறினார்கள். மாடி வெராண்டாவிலேயே நின்றிருந்தார் சுதனின் அப்பா !
” ஹலோ. .. அங்கிள். ” வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் சொன்னாள் மலருதா!
” அட. வாங்க கண்ணுங்களா.. குட் ஈவினிங். ” எனச் சிரித்தார்
” குட் ஈவினிங் அங்கிள் ”
யுகநிதாவைப் பார்த்துக் கேட்டார் ” எப்படிமா இருக்க?”
” ப.. பைன். அங்கிள் ” தடுமாறினாள் .
உள்ளுக்குள் உதறலெடுத்த போதும். ..அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல நடித்தனர் இருவரும் !
” அப்றம். டியூசன்லாம் போறதில்லயா.ரெண்டு பேரும். .? ” எனக் கேட்டார்.
” இல்ல . அங்கிள். ”
” ஏன். ? ”
” போய்ட்டுதான் இருந்தோம் ..அந்தக்காக்கு கல்யாணமாகிருச்சு. இப்ப அவங்க இல்லாததால. வேற எங்கயும். ..டியூசன் போகல அங்கிள். ”
” நோ.நோ.. அது ரொம்ப தப்பு. . டைம்லாம் வேஸ்ட் பண்ணவே கூடாது.. ! சரி என்கிட்ட வாங்க நா.. டியூசன் சொல்லிதா தர்ரேன் . ! நோ..ஃபீஸ்.! ஃப்ரீ டீச்சிங். ..” என்றார் !
உடனே குஷியாகி விட்ட மலருதா. ..
” சரி அங்கிள். ” என்றாள்.
இது எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் எனத் தோன்றியது அவளுக்கு. ! காதலிக்க வேறிடம் தேவையில்லை ! டியூசன் என்கிற பெயரில் தினமும் பார்த்துக் கொள்ளலாம் !
” கான்வென்ட் ஸ்கூலா இருந்தாலும் கார்ப்பரேசன் ஸ்கூலா இருந்தாலும். . டியூசன் ரொம்ப முக்கியம் .. நாளைலருந்து இங்க வாங்க நான் சொல்லித்தர்ரேன் உங்களுக்கு. .. ” என்றார்.
” தேங்க்ஸ் அங்கிள். ” என்றாள் யுகநிதா ” உங்களுக்கு என்ன ஜாப் ..? ”
” வி ஜே மில்லுல சூபர்வைசர்மா. சார்ப்பா.. அஞ்சரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவேன் .. நல்ல சம்பளம் தர்றான் படிப்பு சொல்லித்தர்ரதுக்கு எதுக்கு பணம்.. ? ரெண்டு பேரும் நாளைலருந்தே வந்துருங்க. ” என்றவர்..யுகநிதாவின் தோளில் கை வைத்துக் கேட்டார் ” எப்பருந்து உங்களுக்கு எகஸாம் ஸ்டார்ட்டாகுது. ? ”
” நெக்ஸ்ட் வீக் அங்கிள்.. ”
” இப்படி ஈவினிங் டைம்ல . டைம் வேஸ்ட் பண்ணாம.. படிச்சா உங்க ப்யூச்சர் பிரைட்டா இருக்கும்..! சரியா கண்ணுங்களா. ? ”
இருவரும் சிரித்தனர்.
” சரி அங்கிள் . ”
மலருதா கேட்டாள் ” ஆண்ட்டி இல்லியா அங்கிள்.. ? ”
” ஷாப்பிங் போயிருக்காம்மா.. வந்துருவாங்க. ” என்றார்.
” உங்க சன் அங்கிள். ? ”
” வர்ர நேரம்தாம்மா. வந்துருவான்.. ! அப்றம்.. உங்க ரெண்டு பேருக்கும் என்னெல்லாம் இண்ட்ரஸ்ட் ? ” என ஆரம்பித்தார் !
இரண்டு பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தனர் .. !!!
ஆண்ட்டி வந்துவிட்டாள் . ஆனால் சுதன் வரவே இல்லை.
இருட்டியபின்னர் இருவரும் விடைபெற்றுக் கிளம்பினர் !
படிகளில் இறங்கும்போது..
” ரொம்ப வழிறார்டி.. ” என்றாள் யுகநிதா !
மலருதா சிரித்தாள். “ஆமாடி..! வயசாய்டிச்சில்ல. . அதான் ”
” அப்றம்.. தொட்டுத் தொட்டு பேசறாரு. ”
” ஏய்.. நாம அவ்ளோ அழகா இருக்கோம்னு நெனச்சிக்கோ. ”
” ஹ்ம்.. நாளைலருந்து டியூசன் வேற.வரச் சொல்றாரு.. ”
” பீஸ் இல்லதான. ! அதில்லாம நாம என்ன படிக்கவா வரப்போறோம்.. ! லவ் பண்ண இது ஒரு நல்ல சான்ஸ்”
” நாம இல்ல. .. நீ. ” என்றாள் யுகநிதா.
” ஏய். பிரேமும் இங்க வருவான்டி. ”
” மொதல்ல நம்ம லெட்டருக்கு என்ன ரிசல்ட்னு தெரியனும். . ஒண்ணுமே தெரியாம டென்ஷனா இருக்கு. ”
” ஆமாடி .. எப்படியாவது.. சுதன்கிட்டக் கேட்றனும் ” என்றாள் மலருதா !!
மறுநாள் முதல் டியூசன் தொடங்கியது. நன்றாகவே நடத்தினார்.! எளிமையாகவும் அவர்களுக்குப் புரியும் விதமாகவும் சொல்லிக் கொடுத்தார் ! அவர்களது படிப்பில் மிகுந்த அக்கறை காட்டினார். அவ்வப் போது மனோரீதியாகவும் பேசினார்!.
பாடத்தில் அவள்கள் சந்தேகம் கேட்கும் போது..
” குட் .. வெரிகுட். ” எனப் பாராட்டவும் செய்தார். !!!
ஆனால். ..
அவள்களுக்குரிய பதில் மட்டும் கிடைக்காமலே இருந்தது.! சுதனோடு தனியாகப் பேசவே முடியவில்லை !! அவனும் மலருதாவிடம் எந்த ஆர்வமும் காட்டவில்லை. .! அவள் கொடுத்த லெட்டரையே மறந்து விட்டவன் போல நடந்து கொண்டான் !
☉ ☉ ☉
தேர்வு துவங்கிவிட்டது !
ஒரு காலை வேளை.. !!
மாடிக்குப் போன மலருதா அறை வாயிலில் நின்று.
” ஆண்ட்டி. . ” எனக் குரல் கொடுத்தாள்.
” யாரு. . மலரா.. ? ” என உள்ளிருந்து. .கேட்டது ஆண்ட்டியின் குரல் !
” ஆமா. . ஆண்ட்டி .! அங்கிள் இல்லையா ஆண்ட்டி .. ? ”
” ஏம்மா.. ? ” எனக் கேட்டவாறு வெளியே வந்த ஆண்ட்டி முகத்தில் ஏதோ க்ரீம் பூசியிருந்தாள்.
” நேத்து டியூசன் வந்தப்ப.. என்னோட ‘பென் ‘ன இங்கயே மறந்து விட்டுட்டு போய்ட்டேன் ஆண்ட்டி. .. ” உள்ளே போனாள்.
” அந்த மேஜை ட்ரால பாரு. .”
ஆண்ட்டி காட்டிய மேஜை ட்ராவைத் திறந்தாள்.உள்ளே அவளது பேனா இருந்தது !
” இருக்கா. ? ”
” ஆ. இருக்கு ஆண்ட்டி. .. ” கூடவே இரண்டு கடிதங்கள் தெண்பட்டன.!
இரண்டு பருவக்கிளிகள் எழுதிய அழகான காதல் கடிதங்கள் அவை !!!
அதை இப்படியா மேஜை ட்ராவில் போட்டுவைப்பது.. மடையன்.. !
அவள் கடிதங்களை ஆர்வமுடன் எடுக்க. .
ஆதைப் பார்த்த ஆண்ட்டி. .
” என்னம்மா அது.லெட்டரா ? ” எனக் கேட்டாள்.
சட்டெனக் கீழே போட்டாள் மலருதா ” தெ.தெரில. ஆண்ட்டி. ”
அவளது இதயம் எகிறியது. மனதை ஒரு பயம் கவ்வ.. படபடப்பாகியது.
ஆண்ட்டி சிரித்தவாறு அருகில் வந்து. . அவள் தோளில் கைவைத்துச் சொன்னாள்.
” இது படிக்கற வயசுமா.! நல்லா படிச்சு..முண்ணுக்கு வாங்க. ! உங்க ரெண்டு பேருக்கும். . இன்னும் வயசிருக்கு..! நல்ல ஒரு நெலமைக்கு வந்தப்றம் லவ் பண்ணுங்க.. ”
அதைக் கேட்ட மலருதா அதிர்ந்து போய் நின்றாள் !
யுகநிதா வீடு. .. !!!
பதட்டமும். . படபடப்புமாக நின்றிருந்த. . மலருதாவை. அதிர்ச்சியோடு பார்த்தாள் யுகநிதா . !
” என்னடி சொல்ற.. ? ”
” ஐயோ. .. என்னால் எதுமே பேசமுடியல. பயஙகர ஷாக் ”
” அ. அப்ப. .. நாம மாட்னமா..?”
” ஆமா. .. ! நல்லா வசமா மாட்டிட்டோம் ”
” இ. இப்ப. . எ. என்னடி. பண்றது.? ”
” அதான்டி எனக்கும் புரியல ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன்.. ? ”
” சாக வேண்டியதுதான். ” என்றாள் பயந்து போன யுகநிதா
சிறிது நேரம் கழித்து. ..
” ஆனா.. அவங்க ரொம்ப நல்லவங்கடி. ” என்றாள் மலருதா! ” இதே வேற ஃபேரண்ட்ஸா இருந்திருந்தா என்றாகிறது நம்ம நெலமை ?”
” செத்தோம் .. கண்டிப்பா நம்ம வீட்ல சொல்லி.. நம்ம பேரவே நாறடிச்சிருப்பாங்க. ” யுகநிதா
” எங்க வீட்ல. ஷ்யூரா எனக்கு சூடுதான் ”
” தேங்க் காட்.! நல்லவேள ஆண்ட்டி நல்லவங்கன்றதால. . தப்பிச்சோம் . . ”
” நாம. .. ப்ரே பண்ணது வீண் போகல.”
” ஆண்ட்டி மட்டுமில்ல . அந்த அங்கிளும். .. ரொம்ப நல்லவர்தான். ”
இருவரும்..
ஒருவருக்கொருவர் ஆறுதலாகப் பேசிக் கொண்டனர் . விதியின் விபரீதம் புரியாமல். . !!!