உடலுறவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளின் பிரச்னைகளும்!

555

olpathu epadi, penkalukku viraippu piracchani, sakilasex, sexgame, tamil kama sutra, tamil kamasutra, Tamil sex

தேவையற்ற கர்ப்பத்தைத் தடுப்பதற்காக, உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் உள்ளன. கருமுட்டை வெளியிடப்படும் செயலைத் தடுப்பதன்மூலம்/தாமதிப்பதன் மூலம் இவை கருத்தடை செய்கின்றன என்று கூறப்படுகிறது. இவை மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடியவை. ஆனாலும் இவை பற்றி பலருக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் பற்றிய சில தவறான கருத்துகளைப் பற்றித் தெளிவு படுத்தவே கீழே சில தகவல்களைக் கொடுத்துள்ளோம்:Quick facts about morning-after pills

1. இவற்றை காலையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தவறு (Not only meant for morning after)
உடலுறவுக்குப் பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முன்கூட்டியே இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சிறந்த பலன் கொடுக்கும், ஆங்கிலத்தில் இவற்றை மார்னிங்-ஆஃப்டர் பில்ஸ் என்பார்கள், அதை வைத்து இவற்றை காலையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம்!

2. மற்ற முறைகளைவிட இவை அதிக பலன் கொடுப்பவை (Morning-after pills can be relatively effective)
பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு 24 மணிநேரத்திற்குள் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் அதில் 95% பலன் கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 72 மணிநேரத்திற்குள் எடுத்துக்கொண்டால் கர்ப்பமடையும் வாய்ப்பை 89% குறைக்கிறது என்று கூறப்படுகிறது.

3. இவை தோல்வியடையாது என்பது தவறு (However, they are not fail-proof)
மாத்திரைகளுடன் வரும் வழிகாட்டித் தாளில் இருப்பவற்றைப் படிக்கத் தவற வேண்டாம்! கருத்தடை மாத்திரைகள் எப்போதும் 100% செயல்திறன் கொண்டவையல்ல. அவசர சூழ்நிலைகளில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும், தொடர்ந்து கருத்தடைக்காக அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை கர்ப்பமடையும் வாய்ப்பை 89% குறைக்கிறது என்று ஆய்வுகள் காண்பித்தாலும், இவை தோல்வியடைந்து கர்ப்பம் உண்டாக 11% வாய்ப்புள்ளது! பால்வினை நோய்களில் இருந்து இவை உங்களைப் பாதுகாக்காது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

4. இவை பக்க விளைவுகள் உள்ளவை (Side effects exist)
இந்தக் கருத்தடை மாத்திரைகள் பின்வருபவை போன்ற சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்:
குமட்டல்
தலைச்சுற்றல்
அடிவயிற்றில் வலி
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த பக்க விளைவுகள் சில நாட்களுக்கு நீடிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது, சிலசமயம் இவற்றுடன் கறைபடுதல், மாதவிடாய் தாமதமாதல், மாதவிடாய் வராமல் தவறுதல் ஆகிய பக்க விளைவுகளும் இருக்கலாம்.

5. இவை கருக்கலைப்பு மாத்திரைகளல்ல (Not an abortion pill)
புரோஜெஸ்ட்டின் மட்டும் கொண்டுள்ள அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் ஏற்கனவே உருவாகியிருக்கும் கருவை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை என்று சில மருத்துவ வல்லுநர்கள், தெரிவிக்கின்றனர். அதாவது, ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் பெண் கருத்தடை அவசரநிலை கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொண்டால், அதனால் கரு கலையாது.

Previous articleகாமசூத்ராம் அறிவுறுத்தும் ஆண்களுக்கான தகவல்கள்!
Next articleஉடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்!