உறவிற்கு முன் எப்படி உணர்ச்சியை தூண்ட வேண்டும்?

967

Tamilsex.com , tamil kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , antharangam , tamil kamasutra tamilxdoctor , tamil sex doctor , Antharangam | Tamildoctor

எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.

இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச்சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமையாக அறிந்திருத்தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறைபாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்களும் அதனைத் தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதாலும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுபோல பெண்களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற்படலாம். இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரணம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படுதல் போன்றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்.
மாதவிலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக்கு நின்ற (மெனோபாஸ்) பின்னர் பாலியல் உணர்ச்சி குறைந்துவிடும் என்று பலர் எண்ணுகிறார்கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் செக்ஸ் உணர்ச்சி கூடுதலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந்தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபடலாம். மாதவிலக்கு நின்றபின் உடல் உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசமயம் உடல் உறவின் போது எரிச்சல் இருக்கும். இதற்கு இன்று அதிநவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமான இன்பம் பெற இவர்கள் மெனோபாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ்மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று.
பெண்களின் ஓரினச்சேர்க்கை:
பெண்களின் ஓரினச்சேர்க்கைக்கு லெஸ்பியன் என்று பெயர். இது தற்கிளர்ச்சிக்கும், சுய இன்பத்திற்கும் இணையானது. விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகள், பெண்களிடம் இப்பழக்கம் இருக்கிறது.
திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவதற்கு காரணம் கணவன் மூலம் திருப்திகரமான உச்சக்கட்டம் அடையாததுதான். மாணவிகளுக்கு சூழ்நிலை ஒரு காரணமாக உள்ளது.
இந்த லெஸ்பியன் பழக்கம் அளவுடன் இருக்கும்வரை தவறில்லை. அளவுக்கு மீறினால்தான் தவறானது. சில சமயம் அளவுக்கு மீறிப் போகும்போது ஆண்களையே வெறுக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது.
பாலியல் ரிதியான குறையுடனேயே வாழ்நாள் முழுவதும் வாழாமல் குறையை நிவர்த்தி செய்வதற்கு நவீன மருத்துவம் சிறந்த வழிகாட்டுகிறது.

Previous articleஉடலுறவு ஈடுபட தேவையான தகுதி இவைகள் தானம்!
Next articleஉடலுறவில் விருப்பம் குறையும் பிரச்சனையும் தீர்வுகளும்!