வாஜீகரணம்
இரசாயனத்தை பயன்படுத்தி மனிதன் நோயற்று வாழத் தொடங்கியவுடன் உள்ளத்திற்க்குஉவகையூட்டும் வாஜீகர்ணத்தை நாட வேண்டும் .
எனெனில் அறம் பொருள் அன்பு புகழ் அனைத்தும் இதனையே சார்ந்துள்ளது .மகப்பேறின்காரணம் வாஜீகரணமேயாகும்.
ஆண்மையைவளர்க்கும்முறை -வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?
- ரசாயன சிகிச்சையை மேற்கொள்வது போல் மேற்கொள்ளவேண்டும்
- முதலில் -உடலை தூய்மை படுத்தும் சிகிசைகளான பஞ்சகர்ம எனப்படும் சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும்
வலிமை ஆண்மை மகபேற்றின் பெருக்கம் இவற்றை விரும்பும் மனிதன் வாந்தி பேதி (பஞ்சகர்ம சிகிச்சை ) மருந்து உண்டு உடலைத் தூய்மைபடுத்தி வலிமையையும் ஆண்மையை வளர்க்கும் எண்ணை வசதிகளுடன் கசாய வஸ்திகளை(பஞ்சகர்ம சிகிச்சை ) முறைப்படி செய்து கொள்ளவேண்டும் .இவர்களுக்காக எண்ணை நெய் பால் சர்க்கரை தேன் முதலிய பொருட்களுடன் கூடிய மருந்துகளை கொண்டு வஸ்திகளைச்(பஞ்சகர்ம சிகிச்சை ) செய்விக்கவேண்டும் ..பிறகு பால் மாமிசரசம் இவற்றை உண்பதற்கு கொடுக்க வேண்டும் .
கட்டுப்பாடுகள் எவை எவை ?
ஆயுளை விரும்புகிறவன் பதினாறு வயதுக்கு முன்பும் ,எழுவது வயதிற்கு பின்பும் பெண்களோடும் புணரகூடாது.
மிகவும் இளமையாக உள்ளபோது தாதுக்கள் போதுமான அளவு வலிமை அடையாத போது புணர்ச்சியினால் விந்து உலர்ந்து போய் விடுகிறது
குறைந்த தண்ணீருடைய குளம் கடுமையாக வெயிலினால் உலர்வது போல்
பட்டுப்போன உலர்ந்த செல்லரிக்கப்பட்ட வறட்சியான மர கட்டை -தொட்டவுடன் உடைந்து விடுவது போல்
தாதுக்கள் சரிவிகிதில் இல்லாதனுக்கு அளிக்கப்படும் வாஜீகர்ண சிகிச்சையில் கட்டுப்பாடு தேவை
விந்து குறைய காரணம் என்ன ?
முதுமை,கவலை ,
நோய் ,
மிக்க உடல் உழைப்பு
,பட்டினி கிடத்தல்
மிகுதியான பெண் புணர்ச்சி – ஆகியவற்றால் விந்து குறைவு ஏற்படுகிறது
சிற்றின்ப வேட்கை தோன்றாமைக்கு காரணம் என்ன ?-செக்ஸ் உணர்வு இல்லாமைக்கு காரணம் இவைகள்
விந்து குறைவு
பயம்
நம்பிக்கையின்மை
துக்கம்
பெண்களிடம் குற்றத்தை காணுதல்
புணர்ச்சியின் சுவை அறியாமை
பெண்களோடு அடியோடு தொடர்பு இன்மை
அதிக புணர்ச்சியினால் பெரும் இன்பதை அடைதல் – ஆகிய காரணங்களாலும் மனம் உடல் பலஹீனத்தாலும் குறையும்
விந்துவின் இடம் -வெளியாகும் வகை -என்னென்ன
கரும்பில் சாறு போல்,தயிரில் நெய் போல் ,எள்ளில் எண்ணை போல் -விந்து மனிதன் உடல் முழுவதும் பரவி உள்ளது
தொடுபுலனில் இன்பத்தால் -ஈரமான ஆடையை பிழிந்தால் தண்ணீர் வெளிவருவது போல் -உடல் முழுவதும் உள்ள விந்து வெளியாகும்
விந்து வெளியாக காரணம் என்னென்ன
சிற்றின்ப வேட்கை
பெண்களின் மீது பெரு விருப்பம்
விந்துவின் இளகும் தன்மை
பிசுபிசுப்பு தனை குறைவாக இருக்கும் தன்மை
நுண்ணியதன்மை
வெளியாகும் தன்மை
வாயுவின் விரைவு தன்மை – ஆகிய காரணங்களால் விந்து வெளிப்படுகிறது
பயனுள்ள விந்து எப்படி இருக்கும் ?
அடர்த்தியானதும்
இனிமை (மதுர )ஆனதும்
எண்ணை பசை உள்ளதும்
கெட்ட நாற்ற மில்லாததும்
குரு (கெட்டியான )தன்மை உடையதும்
பிசுபிசு தன்மை உடையதும் – உள்ள விந்து கட்டாயமாக மகப்பேறை தரும்